பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ! வள்ளுவன் இயற்றிய உலகப் பொதுமறையில் பெருமை என்ற அதிகாரத்தின் 2 வது குறள் - “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” !! பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உரக்க உரைத்திற்று. ஆனால் பிறப்பில் பேதம் கற்பிக்கும் சாதி தமிழ்ச் சமூகத்தில் நுழைந்து நம்மை பிளவுபடுத்தியது. சாதி என்பது ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஒரு சமூக அவலம், அது ஒரு உரிமை மீறல், பாகுபடுத்தி நடத்துதல், ஒரு வன்முறை என்பதை பலரும் உணரவேயில்லை. சாதிய படிநிலையில் மேல் சாதி உயர்ந்த சமூக நிலையும், கீழ் சாதி தாழ்ந்த சமூக நிலையும் கொண்டவர்களாக கருதப்படுகின்றார்கள். இந்நிலையான வேறுபாட்டை நிலைநாட்டும் வண்ணம் பல்வேறு சமூக மரபுகளும் சடங்குகளும் அம்மக்களை முட்டாளாக்கி வைத்திருக்கின்றது. இன்று தமிழர்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளனர், அக்காலத் தமிழர் கடல் கடந்து வாணிபம் செய்தனர், இக்காலத் தமிழர் கணினித் துறையில் பணியாற்றுகின்றனர். ஆனால் சாதி எனும் பிறப்பினால் பேதம் கற்பிக்கும் இழிநிலையை இந்த தகவல் தொழில் நுட்பப் புரட்சிக் காலத்திலும் விடுவதாக இல்லை. குறுந்தொகை பாடல்: யாயும் ஞாயும் யாரா கியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர், யானும் நீயும் எவ்வழி யறிதும், செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. பொருள்: உன் தாயும் என் தாயும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. ஆயினும் நாம் ஒருவரை ஒருவர் கண்ட கணத்தில் பாலை நிலத்தில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டனவே என்று பாடி காதல்கொண்ட தமிழினம், இன்று காதலை மறுத்து ஒடுக்கப்பட்டோர் தலையை வாங்குகின்றது. கற்பொழுக்கம், களவொழுக்கம் என்பதே தமிழர் பண்பாடாக இருந்தது என சங்கப்பாடல்கள் இயம்புகையில், இன்றோ ஒரு பெண்ணுக்கு தன் தலைவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்த தமிழ்ச் சமூகம் மறுத்து வைத்திருக்கின்றது. இங்கு எத்துனை கொலைகள் சாதியின் பெயரால் இன்றும் நடைபெறுகின்றன என்று எண்ணிப்பார்த்தால் வேதனை தான் மிஞ்சுகிறது. அதுவே சாதி மாறிய இருவர் காதல் புரிவதையும், திருமணம் புரிவதையும் தடுக்கின்றது. இளவரசன், கோகுல் ராஜ், சங்கர் என வரிசையாக பிறப்பின் அடிப்படையில் கற்பனை வடிவான சாதியைக் கூறி கொலைகள் செய்கின்றது. Siragu-pirappokkum4 உலகில் யார்வேண்டுமானாலும் மதம் மாறிவிடலாம், தொழில் மாறிவிடலாம் ஆனால் இந்திய சாதிய முறையில், பிறப்பால் ஒரு சாதியில் பிறந்த ஒருவர் வேறு ஒரு சாதிக்கு மாற முடியாது. அதனையே புற்றீசல்கள் போல முளைத்துள்ள சாதி சங்கங்களும் சாதி மட்டுமே நிரந்தரமானது அழிக்கமுடியாதது என கொக்கரிக்கின்றன. இந்த கொக்கரிப்பு இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக திகழும் தமிழ்மண்ணில் எப்படி சாத்தியமானது என்று எண்ணவேண்டியுள்ளது. சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட நாட்டில், முதல் சட்டத்திருத்தம் 1951-இல் தந்தை பெரியார் அவர்களின் போராட்டத்தின் காரணமாக திருத்தப்பட்டு அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி உரிமை வழங்கப்பட்டது. அப்படி இந்தியா துணைக்கண்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருந்த தமிழ்நாடு, இன்று சாதி வெறியர்களினால் பாழாகிறது என்ற பதைப்பு தமிழகத்தில் உள்ள அனைத்து நடுநிலையாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலை மாற என்ன செய்யவேண்டும்?. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் குரலை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து குழப்ப நிலையில் உள்ள மக்களிடம் விளக்க வேண்டும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கனியன் பூங்குன்றனார் கூறிய சிறப்புப்பெற்றத் தமிழகம் எங்கே?. சொந்த ஊரிலேயே, மண்ணின் மைந்தர்களை கேளிர் உறவினனாக ஏற்காது கொலை செய்கிறது இன்றைய தமிழகம். இந்த இழிநிலை மாறவேண்டும் எல்லோரையும் உறவாக நினைத்து வாழ்ந்த நிலையில், இடையில் வந்து நம்மை பிளவுப்படுத்திய சாதி முற்றிலும் அளிக்கப்படவேண்டும். மக்களிடமும் மனமாற்றம் தேவை. அது சாதி ஒழிப்பு என்ற சுய சாதிப் பற்றை துறப்பதிலிருந்தும், சாதி மறுப்பு திருமணங்களில் இருந்தும் துவங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தரணி ஆண்ட தமிழினத்தில் பிறப்பில் வேற்றுமை இல்லை என்று உறக்கச் சொல்வோம் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” !! 2 கயர்லாஞ்சி - நிறைவேற்றப்பட வேண்டிய மரணதண்டனை அரசமுருகு பாண்டியன் “பாபுராவ் லட்சுமன் என்பவரும் அவருடைய சகோதரர் கவுராவ் என்பவரும் அகமதாபாத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். மகர் சமூகத்தைச் சேர்ந்த இவர்களோடு தக்காணப் பகுதியிலிருந்து வந்த மராத்தா சாதியைச் சேர்ந்த சிலர் பழகி வந்தனர். பாபுராவ்- கவுராவ் இருவரும் மராத்தர்களுடைய விருந்தில் கலந்துகொள்வது வழக்கம். சமீபத்தில் அவர்கள் சாதி மகர் என்பது தெரியவந்தது. தங்கள் இடத்தைத் தீட்டுப்படுத்திவிட்டார்கள் என மராத்தா சாதியினர் மகர் சகோதரர்களைச் சகட்டுமேனிக்குத் திட்டி அடித்துத் துன்புறுத்தி பாபுராவ் அணிந்திருந்த தங்க மோதிரத்தைப் பிடுங்கி ரூ. 11க்கு விற்று, இவர்களை மகர் என்று அடையாளம் காட்டியவனுக்கு ரூ. 6 கொடுத்துவிட்டு, ரூ.500 தண்டம் கட்டினால்தான் இருவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று சிறை வைத்தனர். தங்கள் சாதியை மறைத்ததற்காக அவர்களுக்குக் கூடுதலான தண்டனை வழங்க வேண்டும் என்று காட்டு மிராண்டித்தனமான செயல்களைச் செய்யத் துணிந்தனர் மராத்தா சாதி வெறியர்கள். இருவரது இடதுபுற மீசையையும் வலதுபுற கண்இமையையும் சிரைத்தனர். அவர்கள் உடம்பு முழுவதையும் எண்ணெயையும் அழுக்கையும் பூசிக் கரியாக்கினர். கழுத்தில் பழைய செருப்பு மாலையை அணிவித்தனர். கையில் விளக்குமாறு கொடுக்கப்பட்டது. "உயர்சாதியினரைத் தொட முயன்ற திருடர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது” என எழுதப்பட்ட அட்டையை கையில் கொடுத்து, முன்னால் முரசு முழங்க 75 பேர் அடங்கிய ஊர்வல மாக மகர் சகோதரர்களை இட்டுச் சென்றனர்.” அண்ணல் அம்பேத்கர்-நாகரிகமா நயவஞ்சகமா, பக்.35-36 தலித்துகள் மீதான வன்கொடுமைகள் இன்றுநேற்றல்ல, பார்ப்பனியம் இந்த மண்ணில் நிலைநிறுத்தப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. குடிசையோடு தலித்துகளை வைத்துக் கொளுத்துதல் (வெண்மணி), ஊரையே சூரையாடுதல் (கொடியங்குளம்), தூங்கும்போது கழுத்தை அறுத்துக் கொல்லுதல் (புளியங்குடி), வாயில் மலம் திணித்தல் (திண்ணியம்), பட்டப்பகலில் ஓடும் பேருந்திலிருந்தவர்களைப் படுகொலை செய்தல் (மேலவளவு), இப்படியாகப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். விடுதலை பெற்றதாகச் சொல்லப்படும் இந்த 60 ஆண்டுகளில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருக்கின்றனவேயொழிய குறைந்தபாடில்லை. அதன் சான்றாதாரங்களில் ஒன்றுதான் கயர்லாஞ்சி. மகாரஷ்ட்ரா மாநிலம், பண்டாரா மாவட்டம், மொகாலி வட்டத்தில் உள்ள சிறிய கிராமம் கயர்லாஞ்சி. இந்தக் கிராமத்தின் பெரும்பான்மை மக்கள் ஜாட் எனப்படும் பிற்படுத்தப்பட்ட இந்துச் சாதியினர். அந்தக் கிராமமும் அதன் நிலங்களும் நிர்வாகமும் காலங்காலமாய் இவர்கள் ஆதிக்கத்தில் இருந்து வருகின்றன. அக்கிராமத்தில் சுய மரியாதைக்கான வாழ்வு தேடி அண்ணல் அம்பேத்கர் வழியில் பௌத்தத்தைத் தழுவிய மகர் குடும்பங்கள் மூன்று. அவற்றுள் ஒன்றுதான் பையாலால் போட்மாங்கே குடும்பம். பையாலால் மனைவி சுரேகா(44), மூத்த மகன் ரோஷன்(23), பார்வையற்ற இளைய மகன் சுதிர்(21), மகள் பிரியங்கா(19) ஆகியோர் குடும்ப அங்கத்தினர்கள். ரோஷனும் பிரியங்காவும் அந்தக் கிராமத்தில் அதிகம் படித்தவர்கள். இது படிக்காத அந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்தின் கண்களை உறுத்தியது. மேலும், அவர்கள் ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக் காரர்களாய் இருந்ததும் அவர்களுக்குப் பொறுக்கவில்லை. எப்படியாவது நிலத்தை அபகரிக்க எண்ணி கிராமத் தலைவரின் வயலுக்குச் செல்ல பாதை கேட்டு இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரித்தனர் சாதி இந்துக்கள். எஞ்சிய நிலத்தையாவது பாதுகாக்க வேண்டுமென்று பக்கத்துக் கிராமத்தில் வசிக்கும் சித்தார்த்திடம் முறையிட்டனர். சித்தார்த் அரசியல் அனுபவம் வாய்ந்தவர். அவர் இவர்களுக்காக 03-09-2006ஆம் நாள் கயர்லாஞ்சிக்கு வந்து கிராமத் தலைவரிடம் நியாயம் கேட்டார். இது அங்குக் கூடியிருந்த சாதிவெறியர்களுக்கு ஆத்திரமூட்டியது. இந்த வழக்கைத் திசை திருப்பும் நோக்கில் சுரேகாவிற்கும் சித்தார்த்துக்கும் பாலியல் தொடர்பு உண்டு என்றும் சுரேகா கள்ளச் சாராயம் விற்பவர் என்றும் கதை கட்டிவிட்டனர். இனி சித்தார்த் கயர்லாஞ்சிக்குள் நுழையக்கூடாது என்று தடை விதித்தனர். தடையை மீறிய சித்தார்தை அடித்துத் துரத்தினர் கயர்லாஞ்சி சாதி வெறியர்கள். இச்செய்தி அவரது சகோதரர் ராஜேந்திராவுக்குத் தெரிவிக்கப்பட, அவர் காயம் பட்ட சித்தார்த்தை ராய் மருத்துவமனையில் சேர்த்துவிட்டுக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். நேரில் கண்ட சாட்சியாக பையாலால் குடும்பத்தினர் இருந்தனர். இது தொடர்பாக 29-9-2006ஆம் நாள் கயர்லாஞ்சியைச் சேர்ந்த 12 பேர் மகாதி வட்ட நீதிமன்றத் திற்குக் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். பிணையில் வெளிவந்த அவர்கள் ஆத்திரமடைந்து பையாலால் குடும்பத்தைப் பழி தீர்க்க முடிவெடுத்தனர். அவர்களோடு ஆண்களும் பெண்களுமாக அணி திரண்டு ஆயுதங்களுடன் பையாலால் குடிசையை நோக்கித் திரண்டனர். குடிசையில் சுரேகா சமைத்துக்கொண்டிருந்தார், குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தனர். அனைவரையும் அந்தச் சாதிவெறி பிடித்த மிருகங்கள் வெளியே இழுந்துவந்து ஆடைகளைக் கிழித்தெறிந்து நிர்வாணப் படுத்தினர். அடித்துத் துன்புறுத்தி ஊரின் மையப்பகுதிக்கு இழுத்துவந்தனர். சாதி வெறியும் காமவெறியும் ஏற சுரேகாவையும் பிரியங்காவையும் பாலியல் வல்லுறவு செய்யத் தொடங்கினர். வெறியின் உச்சநிலையேறி ரோஷனையும் சுதிரையும் தன் தாயுடனும் தங்கையுடனும் உறவுகொள்ள வற்புறுத்தினர். இதைக் கடுமையாக எதிர்த்த ரோஷன், சுதிரின் ஆண்குறிகள் வெட்டியெறியப்பட்டன. ஒட்டுமொத்த கிராமமே அந்தத் தாயையும் மகளையும் வன்புணர்ச்சிக்குட்படுத்தியது. ஆதிக்க சாதி வெறியர்களின் வீட்டுப் பெண்களும் இந்தக் காட்சியைக் கண்டு ரசித்தார்களேயொழிய எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பின் நான்கு பேரையும் தரையில் தூக்கி எறிந்து விளையாடினார்கள். பிரியங்கா மற்றும் சுரேகாவின் பெண்குறிக்குள் மூங்கில்கழி, இரும்புக் கம்பி என்று கிடைத்த வற்றையெல்லாம் சொருகினர். இந்தக் கொடுமை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தேறியது. உயிர் பிரிந்த போதும்கூட பிணத்தின்மீது பாலியல் வன்முறை செய்தனர். பின்னர் நான்கு உடல்களையும் ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி ஊருக்கு வெளியே புதர்களில் திசைக்கொரு பிணமாக வீசியெறிந்தனர். பின்னர் ஊரைக்கூட்டி இந்தச் சம்பவம் பற்றி யாரும் வாய் திறக்கக்கூடாது, மீறினால் ஊர்விலக்குச் செய்யப்படுவார்கள் என்று மிரட்டிவிட்டுக் கலைந்தனர். இந்தக் கொடூரம் நடந்து கொண்டிருக்கும்போதே ஊருக்குள் நுழைய முயன்ற பய்யாலாலை அவர்களின் உறவினர்கள் தடுத்து நிறுத்திவிடுகின்றனர். இல்லாவிடில் அவரையும் அந்தச் சாதிவெறி மிருகங்கள் கொலை செய்திருப்பார்கள். பின்னர் பய்யாலால் சித்தார்த்தை அழைத்துக் கொண்டு அண்டால்கவான் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இரவு வந்து கயர்லாஞ்சியில் விசாரித்த காவலர்கள் அப்படியொரு சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்று தெரிவித்த ஊர்க்காரர்களை நம்பி திரும்பி விட்டனர். பய்யாலால் குடிசையைக்கூட அவர்கள் எட்டிப் பார்க்கவில்லை. மறுநாள் காலை மகராஜ் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் நான்கு பிணங்களும் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல் துறையால் ஏராளமான புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் சுரேகா, பிரியங்கா பிறப்புறுப்பில் செருகப்பட்டிருந்த கம்பிகள், குச்சிகள் எனப் பல பொருட்கள் பதிவாகியிருந்தன. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர்கள் உடல்கள் உருக்குலைந்து போனதால் பாலியல் வன்முறைக் குட்படுத்தியதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று மருத்துவர்கள் குழு அறிவித்தது. ஒரு வாரம் கழித்து காவல் துறையால் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147இ 148இ 149 மற்றும் 324இன் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது சட்டத்திற்குப் புறம்பாக ஒன்றுகூடுவது, ஆயுதங்களை வைத்திருந்தது, வன்செயலில் ஈடுபட்டது, கொலை செய்தது மற்றும் சாட்சியங்களை அழித்தது என்பதாகும். திட்டமிட்டு கொலை செய்தல், பாலியல் வன்முறை மற்றும் தாழ்த்தப் பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்ற எந்தப் பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு அதன் நடைமுறை விதிகள் 1995ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. இதன் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறை வழக்குகள் அனைத்தையும் இதில் பதிவு செய்ய இச்சட்டம் வழிவகை செய்கிறது. குற்றவாளிகள் தப்பித்துவிடாமல், தடயங்களை அழிக்காமலிருக்க பிணைமறுப்பு, பாதிக்கப்பட்ட தாழ்த்தப் பட்டோருக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவது, அவரது பாதுகாப்பு கருதி ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமை, வழக்கை அரசே ஏற்று நடத்துவதற்கான உரிமை போன்ற பல்வேறு உரிமைகளை வழங்க இச்சட்டம் வழிவகை செய்தாலும், கயர்லாஞ்சி சம்பவத்தில் காவல்துறை இவ்வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யாமல் பொதுவான தண்டனைச் சட்டத்தில் பதிவு செய்தது அதன் சாதி உணர்வையே வெளிப்படுத்துகிறது. அரசு அதிகாரிகளோ, ஊடகங்களோ, அரசியல்வாதிகளோ இது குறித்து ஏதும் பேசாமல் கள்ள மௌனம் காத்தனர். கயல்லாஞ்சி பக்கம்கூட யாரும் எட்டிப்பார்க்கவில்லை. அண்ணல் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய 50ஆவது ஆண்டைக் கொண்டாட நாக்பூரில் தீக்ஷா பூமியில் திரண்ட 15 லட்சம் தலித்துகள் மத்தியில் இச்செய்தி தீயாய்ப் பரவியது. தலித் இயக்கத்தினர், பெண்கள் நாக்பூரிலுள்ள சட்டமன்றம் நோக்கி முழக்கமிட்டுச் சென்றனர். காவல் துறை தடுத்து நிறுத்தியது. ஆனாலும் தலித்துகளின் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தடியடி, கண்ணீர்ப் புகையில் பலர் காயமடைந்தனர். சாலை மறியல் நடந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் உள்ள தலித் போராளிகள் மற்றும் மனித உரிமைப் போராளிகளின் கவனத்தை ஈர்த்தது. பம்பாயில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் திரண்டெழுந்து கயல்லாஞ்சிக் கொடுமைக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் பிறகே உண்மையறியும் குழு, மனித உரிமை அமைப்புகள் கயல்லாஞ்சி சென்று உண்மைகளைக் கண்டறிந்து ஊடகங்களுக்கு செய்தியளித்தனர். ஆனாலும் எந்தப் பயன்பாடும் ஏற்படவில்லை. மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதிலும் எந்தப் புதிய தகவலும் கிட்டவில்லை. மருத்துவர்கள் குழு பாலியல் வன்முறை நடந்ததாக எந்த சான்றும் இல்லை என பகவத்கீதையின் மீதும் அரசியலமைப்புச் சட்டத்தின்மீதும் சத்தியம் செய்தனர். ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னர் கடந்த செப்டம்பர் 15இல் நீதிபதி எஸ்.தாஸ் என்பவர் ஒரு தீர்ப்பை அழுது கொண்டே வழங்கினார். அதன்படி இது முன்விரோதத்தின் காரணமாக செய்யப்பட்ட படுகொலைதானேயொழிய இதற்கு வேறு நோக்கமில்லை (அதாவது சாதிவெறி காரணமல்ல, பாலியல் வெறியும் காரணமல்ல) என்று ஆறு பேருக்கு மரண தண்டணையும் இருவருக்கு ஆயுள் தண்டணையும் அளித்தார். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்று ஊடகங்களில் கதையளந்தாலும் இதை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். மேல் முறையீட்டில் குற்றவாளிகள் தப்பித்துவிட வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்குள் மனித உரிமை ஆர்வலர்கள் மரண தண்டனைக்கெதிராக குரல்கொடுக்கத் துவங்கிவிட்டனர். தலித்துகளின் மீதான ஒவ்வொரு வன்கொடுமையின்போதும் குற்றவாளிகள் தப்பித்துப்போவதையே இது காறும் பார்த்து வந்திருக்கிறோம். காரணம் நீதித்துறையின் சாதியச் சார்புதான். அதற்கு உதாரணம் வெண்மணி குறித்த தீர்ப்பு. அமெரிக்க அய்க்கியக் குடியரசில் ஒரு நீக்ரோ மீதான வழக்கு வருகிறபோது அதை நீக்ரோ நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்று அந்நாட்டுச் சட்டம் வலியுறுத்துகிறது. இந்தியாவில் தலித்துகளின் வழக்குகளுக்கு நீதி வழங்க தலித் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்களா? அவ்வாறு நியமிக்கப்படுகிற நீதிபதிகளும் தலித்துகளுக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதுவார்களா? இதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வளவு பெரிய வன்கொடுமை நிகழ்ந்தும் அதனை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதிவுசெய்ய இயலாத நிலைதான் இந்தியா முழுவதும் உள்ளது. ஆனால் சாதி வெறியர்களோ இந்தச் சட்டத்தை நீக்கக்கோரி முழக்க மிடுகின்றனர். இந்திய வரலாற்றில் தலித்துகளுக்கெதிரான வன்கொடுமையில் இப்போதுதான் முதன்முதலாக மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாதி வெறியர்களுக்கு பாடம் புகட்ட இது ஒரு சரியான வாய்ப்பு. இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டால்தான் இந்தியாவிலிருக்கிற நாற்பது கோடி தலித்துக்களின் மனமும் ஆறுதலடையும். இது போன்ற வன்கொடுமைகள் மேலும் நிகழாமலிருக்க இது ஒரு பாடமாக அமையும். இல்லாவிட்டால் தலித்துகள் நீண்ட காலம் பொறுமை காக்கமாட்டார்கள். 3. எழுத்தாளர்: புதிய மாதவி பிரிவு: திரை விமர்சனம் வெளியிடப்பட்டது: 25 பிப்ரவரி 2019 பரியேறும் பெருமாளும் சில வழக்குகளும் தலித் தமிழ் சினிமா பரியேறும் பெருமாளை நமக்குத் திரையில் கொண்டுவந்த மாரிசெல்வராஜ் அவர்கள் நன்றாகவே பேசுகிறார். அந்தப் பேச்சின் ஊடாக இன்னும் சில கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. அவர் தன்னை ஒரு கலைஞன் என்று பிரகடனப்படுத்திக் கொள்வதில் எவருக்கும் வருத்தமில்லை. ஆனால் அக்கலைகளின் ஊடாக அவர் முன்வைக்கும் கருத்துகளுக்கும் அக்கலைஞன் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில் தவறு என்ன? puthiyamadhavi and mariselvarajபரியேறும் பெருமாள் ஏன் திருப்பி அடிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் நிறைய யோசிக்க வைத்தது. “ என் பெற்றோர்கள் என்னை அப்படி வளர்க்கவில்லை. திருப்பி அடிக்கச் சொல்லவில்லை. ஜெயித்துக் காட்டு என்றார்கள்." "சாதி இந்து என் நண்பன். அவனுடன் நான் எப்படிப் பேசுவது? இதுதான் என் படம்…” "வெற்றி என்பது திருப்பி அடிப்பதல்ல; என் கருத்தை என் பார்வையை எதிராளிக்கு கொண்டு செல்வது தான் வெற்றி..." "பொதுவாக சினிமாவில் கதாநாயகன் தனியாளாக நின்று எதிர்ப்பவனை திருப்பி அடிக்கும் காட்சிகளையே பார்த்தவர்களின் உளவியல் தான் இக்கேள்விகளை எழுப்புகிறது." "பரியேறும் பெருமாள் ஒரு கலைவடிவம்… நான் ஒரு சினிமா கலைஞன்" இப்படியாக மாரி செல்வராஜ் தன் பொன்மொழிகளைச் சொன்னபோது கேட்க சுகமாகவும் இதமாகவும் இருந்தது, கைதட்டினோம். படம் வெளிவந்து மும்பையில் கொடுத்தது போல பாராட்டு பத்திரம்/ விருது பத்திரம் 150 க்கும் மேலாக வாங்கி விட்ட தாக அவர் சொன்னபோதும் கைதட்டினோம். ஆனால் அப்படிக் கொடுத்த அந்த 150 அமைப்புகள் யார்? யார்? என்பது அவருக்குத் தெரியும். அதை அவர் நன்றாகவே புரிந்து கொண்டுமிருப்பார் என்பதும் புரிந்தது. காரணம் அவர் தன் உரையாடலின் ஒரிட த்தில் நம் சமூகம் மூன்று வகையான மக்களைக் கொண்டிருக்கிறது. 1) சாதி வெறி பிடித்தவன் (சாதி இந்து என்று நான் புரிந்து கொண்டேன்) 2) சாதியால் ஒடுக்கப்படுபவன் 3) இந்த இரண்டு பேரையும் பார்த்துக் கொண்டு நமக்கென்ன என்று கடந்து செல்பவன். இந்த மூன்றாவது வகை மனிதர்கள் தான் ஆபத்தானவர்கள் என்று சொன்னார் மாரி. பரியேறும் பெருமாள் இந்த மூன்றாம் வகை மனிதர்களிடம் என்ன மாதிரியான சின்ன அசைவலையை உருவாக்கி இருக்கிறது! சரிதானே… இந்த த் தம்பி சொல்வது சரிதானே! என்ற எண்ணத்தைக் கட்டமைத்து இருக்கிறது என்று மாரி சொல்ல வருகிறார். இதைத்தான் அவர் தன் சாதி இந்து நண்பனுடன் நான் நட த்தும் உரையாடல் என்று முன்வைப்பதாகப் புரிந்து கொண்டேன். இதற்காக மாரி கொடுத்திருக்கும் விலை என்ன? சட்டக்கல்லூரி களம், சாதி மோதல்கள், ஒடுக்கப்பட்டவன் மீது மூத்திரம் அடிக்கும் சாதி வெறி, அண்மையில் கவனிப்புக்குள்ளான ஆணவக் கொலைகள், அதன் பின்னணி, அதற்கு எழுந்த குரல்கள், கறுப்பி, நீல நிறம்… இப்படியாக தன் கலைவடிவம் கவனிப்புக்குள்ளாகும் ஒர் அரசியலை மாரி வைக்கிறார். ஆனால் அதே அரசியல் சார்ந்தக் கேள்விகள் வரும் போது கலை என்ற போர்வைக்குள் தன்னைப் பத்திரப்படுத்திக் கொள்கிறார்.. இது சினிமா உலகில் இருத்தலுக்கான போராட்டம் என்பதையாவது அவர் ஒத்துக் கொண்டிருக்கலாம்! ஒரு பார்வையாளன் கதையின் கதா நாயகன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்று காட்டும்போது அதே சமூகத்தைச் சார்ந்தவன் அக்கதையின் ஊடாக மாரி வைக்கும் சில வசனங்களை காட்சிகளை எப்படி உள்வாங்கி இருப்பான் என்ற புரிதல் மாரிக்கு இருக்கிறது. ஆனால் அவன் அவரை நோக்கி வைக்கும் சில தன் உணர்ச்சியான கேள்விகள் மட்டும் அவரைத் தொந்தரவு செய்கின்றன. நான் வைத்தக் கேள்வி… கதையில் சாதி இந்து கதாநாயகியின் அப்பா பரியேறும் பெருமாளிடம் சொல்லும் ஒரு வசனம்.. “ நல்லா படிங்க தம்பி.. எதிர்காலத்தில எது வேணும்னா மாறலாம் இல்லியா..” இந்த அறிவுரை… அப்படியே பாபாசாகிப் அம்பேத்கரின் வாசகத்துடன் சேர்ந்து பார்வையாளனுக்குள் போகிறது. என்னவோ ஒடுக்கப்பட்டவன் எல்லாம் படிச்சிட்டா சாதி மாறிடும் என்ற சாதி இந்துவின் அறிவுரை… அவன் சாதி என்ற கட்டமைப்புக்கு வைக்கும் அறிவுரை மாதிரி ஒரு தோற்றம்.. அதுதான் படிச்சா மாறிடும் என்று சொல்லும் புத்திசாலித்தனம்… இன்னும் சிலர் சொல்வார்கள்… இப்போல்லாம் யாரு சாதிப் பார்க்கா? நீங்க ஏன் மேடம் சாதிக்கொடுமை தலித் என்றெல்லாம் பேசவேண்டும்? என்னிக்காவது நாங்க உங்கள தலித்துனு நினைச்சிருக்குமோ இல்ல அப்படி நட த்தி இருக்கோமா…’ இந்த டயலாக் தான் சாதி இந்துவின் இந்த அறிவுரைக்குள் ஒளிந்திருக்கிறது. அம்பேத்கார் சொன்னார்... “கல்வி தான் ஒடுக்கப்பட்டவனுக்கான ஒரே ஆயுதம்" என்று. கல்வி தான் அவனை முன்னேற்றும், கல்வி தான் அவனுக்கு பொருளாதர வலிமையைக் கொடுத்து வயிற்றுப் பாட்டுக்காக அடிமையாக இருக்கும் நிலையை மாற்றும். இக்கல்வி தான் சாதிக்கொடுமைகளுக்கு எதிராக போராடும் மனவலிமையை, உடல் வலிமையை, அதிகார வலிமையை, அரசியல் வலிமையைக் கொடுக்கும். இவ்வளவும் அம்பேத்கர் சொன்ன "நீ படி" என்பதற்குப் பின்னாலிருக்கும் அரசியல். இதே அர்த்தம் தொனிக்கும் வசனத்தை ஒரு சாதி இந்து, ஒடுக்கப்பட்டவனைப் பார்த்து சொல்லும் போது அதற்கான அர்த்தங்கள் என்ன? இதைப் பரியேறும் பெருமாள் தான் புரிந்து கொள்ள வேண்டும்… என்னவோ அம்பேத்கர் மாதிரி படிச்சிட்டா… சாதி இந்து அப்பா தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்திடுவார்னு ஒரு தட்டையான சமன்பாட்டுக்கு வந்திடக்கூடாது. ஒடுக்கப்பட்டவனைப் பார்த்து இதைச் சொல்கிறவர் யார் என்பதைப் பொருத்து அதற்கான பொருள் தானே வந்தடைகிறது ! இச்சமூகம் நாள் தோறும் நட த்திக் கொண்டிருக்கும் இந்த அறிவுரைகள் சாதி என்ற கட்டுமானத்தின் மீது நாய் தன் காலைத் தூக்கிக் கொண்டு அடிக்கும் மூத்திரம் மாதிரி தான்! இங்கே நம் பரியேறும் பெருமாளுக்கு இருக்கும் பிரச்சனை கல்வியோ, தகுதியோ அல்ல; அதையும் தாண்டிய வேறு ஒன்று. அதை நேர்கொள்ள முடியாமல் வைக்கும் அறிவுரைகள் யாரைத் திருப்திபடுத்த..? இன்னொரு கேள்வி… இக்கதையில் மிகவும் சிறப்பான ஒருவரின் நடிப்பு, பரியேறும்பெருமாளின் அப்பா. அந்த நாட்டுப்புற கூத்துக்கலைஞன். இப்பட த்தில் அவன் பெண் வேடமிட்டு ஆடும் கலைஞனாக காட்டப்பட்டு, அதனால் ஏற்படும் சமூகத்தின் இழிந்த பார்வையை எதிர்கொள்ளும் கலைஞன். நாட்டுப்புறக்கூத்து கலைஞன் பாத்திரங்கள் எண்ணற்றவை இருக்கும்போது இப்படி ஒரு கதாபாத்திரத்தைக் காட்டுவது ஏன்? இப்படியான ஒரு கதாபாத்திரம் கூடாது என்றோ அல்லது இழிவு என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் இக்கதாபாத்திரம் ஏன் இப்படி காட்டப்படுகிறது? இக்கதையுடன் சேர்த்துப் பார்க்காமல் தனியாகப் பார்க்கும் போது மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இக்கதாபாத்திரம், இக்கதைக்கு அதுவும் ஒடுக்கப்பட்ட கதாநாயகனின் அப்பா என்ற பாத்திரத்திற்கு என்ன பின்னணியைக் கொடுக்கிறது? அதே நேரத்தில் சாதி இந்து கதாநாயகியின் அப்பாவின் தோற்றம் எப்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது? இந்த இரண்டு காட்சிகளுக்கும் நடுவில் பெரிய பள்ளதாக்கு மாதிரி ஏற்றத்தாழ்வுகளை மாரி ஏன் காட்ட வேண்டும்? இன்றைய சாதி சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கும் உளவியல் தானே இதெல்லாம்..! தலித் என்றால் இப்படித்தான் இருப்பான்.. தலித் வீட்டில் நம்ம பொண்ணுக போய் குடித்தனம் நட த்த முடியுமா? என்ற பொதுப்புத்திக்கு இக்காட்சிகளும் தீனி போடுகின்றன. உதிரியாக வரும் கல்லூரி பேராசிரியர், கல்லூரி முதல்வர் அவர்களின் வசனங்கள் தான் பரியேறும் பெருமாளைத் தூக்கி நிறுத்தி பரிமேல் சவாரி செய்ய வைத்திருக்கின்றன. சாதி இந்துவுடன் மட்டுமல்ல சாதி கிறித்தவன், சாதி இசுலாமியர் எல்லோரும் நமக்கு நண்பர்கள் தான். அனைவருடனும் நாம் உரையாடுவோம். உரையாடத்தான் வேண்டும். ரொம்பவும் கவனமாக.. நிதானமாக உரையாடத்தான் வேண்டும். உரையாடலில் தெறிக்கும் நம் ஒவ்வொரு சொல்லிலும் ஒட்டிக் கொண்டிருக்கிறது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அச்சொற்கள் கடந்து வந்த பாதையும்…. கறுப்பி என்பது ஆன்மா மட்டுமல்ல கறுப்பி என்பது கலை மட்டுமல்ல கறுப்பி என்பது அழகியல் குறியீடு மட்டுமல்ல கறுப்பி என்பது ஒரு வரலாறு. பரியேறும் பெருமாளுக்கு வாழ்த்துகள். மாரி செல்வராஜ் அவர்களைச் சந்திக்கவும் உரையாடல் நட த்தவும் களம் அமைத்துக் கொடுத்த மும்பை விழித்தெழு இயக்கம் தோழர்களுக்கு என் அன்பும் நன்றியும். - புதிய மாதவி 2222222222 333333333333333 444444444444444444 GANDHI |
8.PIRAPUKUM
Subscribe to:
Posts (Atom)
1
MT
-
MT
No comments:
Post a Comment