DETAIL
#01.திரு அர்ஜுன் டாங்ளே- INTERVEW-புதியமாதவி #02.இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லையா? #03.இந்து மதக்'காரருக்கு மனம் புண்படுகிறதாம்! #04.VANJINADAN....17/06/1911 #05.SCIENTIST & BOLT #06.RAJALAXMI MURDER..22/10/2018 #07.JAYASRI.KURAL..10/05/2020 #08.இளவரசன் .04/07/2013 #09.SANKAR.12/03/2016 #10.PRANAY -14/09/2018,
மும்பையில் வசிக்கும் தோழர் புதியமாதவி அவர்கள், புதுவிசைக்காக திரு அர்ஜுன் டாங்ளே அவர்களைச் சந்தித்து உரையாடியதிலிருந்து இந்நேர்காணல் தொகுக்கப்பட்டுள்ளது.
#1.
உங்கள் எழுத்துகள் எங்கள் தமிழுலகத்துக்கு ஏற்கனவே அறிமுகமானவை. குறிப்பாக தலித் இலக்கிய வட்டாரத்தில்உங்களை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. நாங்கள் அறியாத உங்கள் இளமைக் காலம் பற்றி அறியவிரும்புகிறோம்.
அர்ஜூன் டாங்ளே: நம்ம தாராவி அருகிலிருக்கும் மாதுங்கா லேபர் கேம்ப் பகுதியில்தான் நாங்கள் குடியிருந்தோம். என் அப்பாகாட்டன் மில்லில் வேலை செய்தார். 15.6.1945 ல் நான் பிறந்தேன். நாங்கள் 6 பேர் அண்ணன் தம்பிகள். தாராவி சால்களில் எனக்குநண்பர்கள் உண்டு. மும்பை துறை முகத்தில் வேலை செய்துகொண்டே நான் மர்ஸி தயாநந்த் கல்லூரியில் முதுகலை படித்தேன்.காலையில் கல்லூரி. 11 மணிக்கு மேல் வேலை. இதற்கிடையில் கவிதை, கதை என்று எழுத ஆரம்பித்தேன். என் தாய்வழி மாமாசங்கர் நாராயண் பவார் பொதுவுடமை இயக்கத்தில் இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் தான் மும்பையில் பாபாசாகிப் அம்பேத்கரின்போராட்டங்களும் இயக்கமும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இந்த இரண்டு இயக்கங்களின் தாக்கங்களுடன் தான் என்இளமைக்காலம்.
ஆனால் பொதுவுடமை இயக்கமும் அம்பேத்கரிய இயக்கமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரானதாகத்தானே
நிறுத்தப்படுகிறது? இரண்டுக்குமிடையே உள்ளது பகைமுரணா ? நட்பு முரணா?
இரு இயக்கங்களும் ஒன்றுக்கொன்று எதிரணியில் நிற்ப தாகச் சொல்லப்படும் கருத்துகளுடன் எனக்கு உடன் பாடில்லை. 1936ல்பாபாசாகிப் அம்பேத்கர் உழைப்பாளர் விடுதலை இயக்கத்தை (Independence labour party) ஆரம் பித்தபோது அந்த இயக்கத்தின்அடையாளமாக இருந்தது சிவப்புக்கொடிதான். மட்டுமல்ல,1938 வாக்கில் நிலமற்ற கூலிவிவசாயப் பெருமக்களை ஒன்றிணைத்துஅவர் நடத்திய பேரணியிலும், கருப்புச்சட்டத்தை (Black act) எதிர்த்து நடந்த போராட்டங்களிலும் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட்தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளை, அங்காடிகளை அதன் உரிமையாளர்கள் எவ்விதமான முன்னறிவிப்போ காரணமோ இன்றி இழுத்து மூடுவதை அங்கீகரித்த சட்டம்தான் கருப்புச்சட்டம். அதை எதிர்த்து நடந்த போராட்டங்களில்டாங்கே, விவேஷ்கர், ஜம்னாதாஸ் போன்ற தோழர்களும் பிரிட்டிஷ் பிரட்லியும் கலந்துகொண்ட வரலாற்றை அறிந்தவர் எவரும்இரண்டு இயக்கங்களும் எதிரணியில் நிற்பதாகக் கருதுவதில்லை.
இந்தியச் சமூகச்சூழலில் சாதிப்படிநிலை ஒழியாமல் சமத்து வம் சாத்தியமில்லை என்ற கருத்தை உள்வாங்கிக்கொள்ளகம்யூனிஸ்டுகள் சற்று காலம் எடுத்துக்கொண்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பல்வேறு இக்கட்டானகாலக்கட்டங்களில் இரு இயக்கங்களும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன. 1957ல் மும்பை மாநகரை மொழிவழிமாகாணப்பிரிவின் அடிப்படையில் மராத்திய மாநிலத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் "ஒன்றுபட்ட மராட்டியம்" (united maharashtra) அமைப் பில் குடியரசுக் கட்சியும் அங்கம் வகித்திருந்தது. 17 சட்ட சபை உறுப்பினர்களும் 7 நாடாளுமன்றஉறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். பிரகாஷ் அம்பேத்கருடன் இணைந்து நாங்கள் ஆரம்பித்த 'பகுஜன் தலித் சமித்சமிக்தி' நிலவுரிமைக்காக நிறைய போராட்டங்களை நடத்தியது. 2009ல் இங்கு நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 3வது அணியின்பெயர் RLDF - Republican left democratic front. அம்பேத்கரிசம் Vs கம்யூனிசம் என்று அடிக்கடி நடக்கும் வாதங்கள் இரண்டுகருத்துருவாக்கங்களை எதிரணியில் நிறுத்தாமல் இணைகோட்டில் நிறுத்தும் வாதங்களாகவே கருதுகிறேன். சொற்பமான சிலர்வரலாறு அறியாமல் இரண்டையும் எதிரணிகளாக கருதி வாதிடுவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
சி.பி.எம் தோழர்கள் இன்று அம்பேத்கரின் கருத்துகளை அதிகமாக அறிந்துகொள்ள விரும்புவதை நானறிவேன். அவர்கள் நடத்தும்இயக்கம் சார்ந்த இதழ்களில்கூட அம்பேத்கரின் புகைப்படம் அட்டைப்படமாக வர ஆரம்பித்துவிட்டது. பத்திரிகையாளர் மதுஷேட்டேபோன்றவர்கள் லெனின் எழு திய அரசும் புரட்சியும் புத்தகத்தையும் அம்பேத்கர் எழுதிய anihalation of caste புத்தகத்தையும் இவ்விருஇயக்கத்தாரும் கட் டாயம் வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இரு இயக்கங்கள் சார்ந்த போராட்டக் களப்பணி இன்றுநீர்த்துப் போயிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் தந்தையார் காட்டன் மில்லில் வேலை பார்த்ததை நீங்கள் சொன்னதும் இன்னொரு செய்தியும் நினைவுக்கு வருகிறது. இந்த மில் தொழில்வளர்ச்சி மும்பையில் ஏற்பட்டதால் மராத்திய தலித்துகளின் வாழ்க்கையில் மிகப்பெரியமாற்றம் ஏற்பட்டது என்று சொல்லலாமா?
உண்மைதான். கிராமங்களில் நிலமற்றவர்கள் நாங்கள். பண்ணையார்களுக்கு அடிமைகள். எங்கள் உழைப்புக்கு கூலி கேட்கும்உரிமை எங்களுக்கு கிடையாது. ஆனால் இந்த தொழில் வளர்ச்சி இந்த பண்ணை அடிமைகளுக்கு தொழிலா ளர் என்ற புதியமுகத்தைக் கொடுத்தது. எங்கள் உழைப்புக் கான ஊதியம் கிடைத்தது. உரிமைகளைக் கேட்பது தவறல்ல என்ற அடிப்படை உணர்வைரொம்பவும் சாதாரண எழுதப் படிக்கத் தெரியாத அனைவரும் புரிந்துகொண்டோம். எங்கள் தலைமுறையின் கல்விக்கு இந்தத்தொழில் வளர்ச்சி உதவி யது. மட்டுமல்ல. 60களில் நாராயண் சுர்வேயின் கவிதைகள்- தொழிலாளர் பிரச்னைகளை முன்வைத்துவெளிவந்தன. பாபுராவ் பாகுல் சிறுகதைத் தொகுப்பு - 'நான் என் சாதியை மறைத்தபோது' - 'jevha mi jaat chorli hoti' வெளிவந்தது. அந்தப்பத்து சிறுகதைகளையும் பத்துதடவை - மின்சாரம் தாக்கியது - ten electric shocks -என்று சொன்னார்கள்.
இந்த மில்களில் அப்போது நிலவிய தீண்டாமைக் கொடுமைகள் குறித்து தொழிற்சங்கங்களின் அணுகுமுறை என்னவாக இருந்தது?
அன்றைக்கு காட்டன்மில்களில் சாதியப்பாகுபாடு இருக்கத் தான் செய்தது. மில் தொழிலாளர்களின் யூனியன்களிலும் தீண்டாமைகடைப்பிடிக்கப்பட்டது என்பதை மறுப்பதற் கில்லை. அன்றைக்கு யூனியன் ஆபிஸ்களில் கயிறு/ரிப்பன் அல்லது நூல்களால்கோர்க்கப்பட்டிருக்கும் கோப்புகள் அல்லது காகிதங்களை பல்நுனியால் கடித்து அவிழ்ப்பார்கள். அப்படி பல்லால் கடிக்கும் குறிப்பிட்டஅந்த வேலைக்கு தலித்துகளை யூனியன் ஆபிஸ்களில் நியமிப்பதில்லை. தலித் எச்சில் பட்ட காகிதத்தைத் தொடுவது யூனியன்தலைவர்களைத் தீட்டுப்படுத்திவிடும் என்பதுதானே காரணமாக இருக்கக் கூடும்! இன்றும்கூட களப்பணியாளர்களிடம் சாதியம்காப்பாற்றப் பட்டுக் கொண்டுதானிருக்கிறது. மேதாபட்கரின் போராட் டங்களில் பங்கேற்றபோது கண்கூடாகக் கண்டேன்.களப்பணியிலும் சாலைப்போராட்டங்களிலும் கலந்து நின்றவர்கள் சாப்பிடும்போது தனித்தனியாகப் பிரிந்து நின்றார்கள். தமிழ்நாட்டில்கூட இரட்டைக்குவளை முறை இன்றும் கிராமங் களில் இருப்பதாக வாசித்திருக்கிறேன். அதுபோலத்தான் இதுவும்.மேதாபட்கரிடம் இதுபற்றி கேட்டபோது 'this is not my problem' என்று சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன்.
போராட்டக்களத்திலேயே சாதியம் இருக்கிறது தீண்டாமை நிலவுகிறது என்றால் மற்ற இடங்களைப் பற்றி சொல்வதற்கு என்னஇருக்கிறது? தலித்துகளுக்காக குரல் கொடுக்கிறார் கள் என்பதைவிட தலித்துகளுக்கு உதவி செய்வதை தொண்டுமனப்பான்மையுடன் - ஒரு charity அமைப்பு போல -நடந்து கொள்வதாகவே கருதுகிறேன். காங்கிரசாகட் டும் காந்தியாகட்டும்இன்றைய மேதாபட்கராகட்டும் இந்த விசயத்தில் ஒரேமாதிரியான மனப்பான்மையுடன்தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள்.
கல்வி நகரமயம் தொழில்மயம் போன்றவற்றால் சாதி ஒழிந்துவிடும் என்று சில அறிவுஜீவிகள் சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அன்றுபோல கண்டால் தீட்டு, தொட்டால் தீட்டு என்பதெல்லாம் மும்பை போன்ற மாநகர வாழ்க்கையில் ஜனநெரிசலில்மிதிபட்டுவிட்டது. இதை மட்டும் ஒரு மாற்றமாக கருத லாமே தவிர சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற் கில்லை. லோக்கல்டிரெயினில் அருகருகே உட்கார்ந்து இன்று எல்லோரும் பயணம் செய்தாலும் பயணம் செய்கிற ஒவ்வொருவரின் அடிமனசிலும் சாதிவாழ்ந்து கொண்டு தானிருக்கிறது. கிராமத்தில் பண்ணையாருக்கு அடிமையாக வாழ்ந்த தலித், நகரவாழ்வில் குடிசைப்பகுதியில்வாழ்ந்தா லும் தினமும் சாலையோரத்தில் குப்பைகளை/ தாள்களை/ ப்ளாஸ்டிக்குகளைப் பொறுக்கிக்கொண்டு ஜீவனம் செய்தா லும்அவன் இங்கே எந்தப் பண்ணையாருக்கும் அடிமை யில்லை! மேலும் தனியார் நிறுவனங்களில் மட்டுமே வேலைவாய்ப்புகள்இருப்பதால் தலித்துகள் மற்றவர்களுடன் சேர்ந்து தன்னைத் தகவமைத்துக்கொண்டு வேலை வாய்ப்புகளை வசப்படுத்திக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ரிசர்வேஷன் காரணமாக இவன் இந்த வேலைக்கு வர முடிந்தது என்று சொல்லும்காரணங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
அடிமட்ட நிலை யில் தலித்துகளுக்கு இதனால் ஏற்பட்டிருக்கும் பாதகங்கள் அதிகம் என்பது உண்மைதான் எனினும் மும்பைபோன்ற மாநகர வாழ்க்கையில் சாதியம் தன் முகத்தையும் வேஷத்தையும் மாற்றிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.அதனால்தான் கிராமத்தை நோக்கிப் பயணம் செய்ய காந்தி போன்றவர்கள் சொன்னபோது பாபாசாகிப் கிராமத்தை விட்டு நகரத்தைநோக்கிய வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தினார். இப்படியாக வெளிப்படையாக சாதியம் மும்பை மாதிரி மாநகரத்தில்தெரிவதில்லை என்பதாலேயே சாதியம் இல்லை, தீண்டாமை இல்லை என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாக அமையும். இங்கே இன்றும் திருமணவீட்டிலும் இழவுவீட்டிலும் சாதி அதற் கான முகம் மாறாமல் அப்படியேவாழ்ந்துகொண்டிருப் பதை நாமறிவோம். நம்முடைய குடியிருப்புகளில் கூட தலித்துகளில் பலர் தன் தலித்திய அடையாளத்தைமறைத்துக்கொண்டு ஏன் வாழ்கிறார்கள்? நகர வாழ்க்கையில் சாதி இல்லை என்றால் அப்படி மறைத்துக்கொண்டு வாழ வேண்டியஅவசியம் என்ன?
காட்கோபரில் (மும்பை புறநகர் பகுதி ) அம்பேத்கரின் சிலை அவமதிக்கப்பட்டதும் அப்போது நடந்தப் போராட்டங் களையும்நினைத்துப் பாருங்கள். மேதாபட்கரின் பேரணி களில் களப்போராட்டத் தளத்தில் நிலவும் சாதியம் குறித்து சொன்னதையும்யோசித்துப் பாருங்கள். எனவே சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. இதைவிடுத்து இன்றைக்கு கிராமப்புறங்களில்சாதிச் சண்டைகள் தீவிரமாகி இருக்கின்றன. தலித்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் விழிப்பு ணர்வு ஆதிக்கச்சாதியினரைஎரிச்சலூட்டுகிறது. பீகார், உத்திர பிரதேச மாநிலங்களில் மிகஅதிகமாக சாதிக் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் அவரது நோக்கங்களைப் பழுதற உள்வாங்கி செயல்படுகின்றனவா?
பார்லிமெண்டெரி டெமாக்ரசியில் அமைப்புரீதியாக அம்பேத்கரின் கருத்துகளை முன்னிறுத்தி அனைத்திந்திய அளவில் செயல்படும்ஓரமைப்பு தலித்துகளுக்கு இல்லை என்பதாலும் இருக்கிற தலித்திய அமைப்புகள் மாநில அளவில் மட்டுமே இருப்பதாலும்பெரும்பாலும் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்தே அரசியல் தளத்தில் நிற்பதாலும் அம்பேத்கரின்கருத்துருவாக்கங்களை இந்த இயக்கங்கள் முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை நீங்கள் வைப்பதாகஎண்ணுகிறேன். ஆனால் அம்பேத்கரின் கருத்துகள் இந்தியா முழுவதும் பரவி இருப்பதும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும்அவருடைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த மாநி லங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதையும் அமைப்பு கள்போராட்டங்கள் இயக்கங்களுக்கும் அப்பாற்பட்டு நடந்த ஒரு மிகப்பெரிய புரட்சியாகவே நினைக்கிறேன்.
50, 60 வருடங்களுக்கு முன் 1924 வாக்கில் காலில் செருப்பு போட அனுமதி மறுக்கப்பட்டவன் காலடியில் விரைந்து ஓடும் காரின்ஆக்ஸிலேட்டர் வந்துவிட்டதை மிகப்பெரிய மாற்றமாகவே நினைக்கிறேன். இந்த மாற்றங்களுக்கு அடித்தளமாக இருந்ததுஅம்பேத்கரின் ஜடியாலஜிதான். அமைப்புரீதியாக அம்பேத்கரின் இயக்கங்களுக்கு மட்டு மல்ல, கம்யூனிச இயக்கங்கள் எந்தளவுக்குமார்க்சியத்தை உள்வாங்கிக்கொண்டு செயல்படுகின்றன? காந்தியத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரசு எங்கே இருக்கிறது?
அம்பேத்கரின் சிந்தனை செயலூக்கத்துடன் நின்று செயலாற்றிய காலம் என்று எதை மதிப்பீடு செய்கிறீர்கள்?
1957 முதல் 1965 வரை அரசியல் களத்தில் செயலூக்கத்துடன் இருந்தக் காலம். நிலமற்றவர்களுக்கு வாழ்வாதாரமாக நிலம் வேண்டிநடந்தப் போராட்டத்தில் சற்றொப்ப 3,87,000 பேர் சிறை சென்றார்கள். அரசு அம்பேத்கரிஸ்டுகளின் போராட் டங்களைக் கண்டுஅச்சப்பட்டது. அக்காலத்தில்தான் உ.பி. யில் ரிபப்ளிகன் பார்ட்டியைச் சார்ந்த 3 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1972முதல் 1975வரை மராட்டி யத்தில் தலித் பேந்தர்களின் காலம். அப்போது தலித் அல்லாத ஒத்த சிந்தனையாளர்களும் எங்களுடன்சேர்ந்து பணியாற் றினார்கள். கலை இலக்கியத் தளத்தில் அம்பேத்கரின் சிந்தனை செயலூக்கத்துடன் எப்போதும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தியா முழுமையும் இந்த அலை கலை இலக்கியத் தளத்தில் தொடர்வதைத்தான் மிகவும் பெருமையும்மகிழ்ச்சியும் தரும் விசயமாக கருதுகிறேன்.
இந்தியக்குடியரசுக் கட்சி இருக்கும்போது 9.7.1972ல் நீங்கள் தனியாக தலித் சிறுத்தைகள் அமைப்பை ஏற்படுத்த என்ன காரணம்?
அமெரிக்காவின் கறுப்பின விடுதலையும் கறுப்பு இலக்கிய மும் என்போன்ற இளைஞர்களுக்கு அதுபோன்ற ஓர் அமைப்பைஉருவாக்கி நிறைய சாதிக்கவேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தி இருந்த காலக்கட்டம். கலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டும்இந்தச் சமூகத்தின் எந்தப் பிரச்னையையும் தீர்த்துவிடாது என்பதையும் உணர்ந்தோம். அப்போதுதான் நான்,என்னுடன் நாம்தேவ்தசல், ஜே.வி பவார் சேர்ந்து தலித் சிறுத்தைகள் அமைப்பை ஆரம்பித்தோம். குடியரசுக் கட்சியின் ஒரு மந்தமான செயல்பாடு எங்கள்வேகத்திற்கு அன்று ஈடுகொடுக்க முடியவில்லை. அதுவும் ஒரு காரணம்.
அவ்வளவு வேகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தலித் சிறுத்தைகள் அமைப்பு ஆரம்பித்த வேகத்திலேயே 1978ல் முடிந்துபோனது ஏன்? உங்கள் அமைப்பில் அப்படி என்ன பிரச்சனை ஏற்பட்டது? அதைத் தவிர்த்திருக்க லாம் என்று நீங்கள்எப்போதாவது நினைத்தது உண்டா?
ரொம்ப பெரிதாக எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. சின்ன கருத்தியல் முரண்பாடுகள்தான் காரணம். மூன்று விதமான குரல்கள்ஒலித்தன. ஒன்று மார்க்சியவாதிகள். எல் லாமே அதற்குள் அடக்கம் என்று நினைப்பவர்கள். அடுத்து தீவிர - கலப்படம் விரும்பாததூய அம்பேத்கரிஸ்ட். நமக்கு அம்பேத்கர் மட்டும் போதும் என்றார்கள், மூன்றாவது புத்திஸ்ட். பதவி, அதிகாரம் இருக்கும்இடத்தில்தான் விட்டுக் கொடுத்தலும் சமரசமும் தேவைப்படுகிறது. எங்கள் அமைப்புகளில் அப்படி எதுவுமில்லை. எனவே சமரசத்திற்கு யாரும் தயாரில்லை. இதேநிலை கம்யூனிச, சோசலிஷ, நக்சல் அமைப்புகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்தவர் களைஉதாரணம் சொல்வதன் மூலம் நான் எங்களை நியாயப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இப்போது நினைப்பது உண்டுதான்..நீங்கள் கேட்பது மாதிரி "தவிர்த்திருக்கலாமோ" என்று. எப்படியோ அது கடந்த காலம். இப்போதும்கூட தலித் பிரச்சனைகளில்நாங்கள் ஒன்றுபட்டு செயல்படுகி றோம். அடிக்கடி என்னைச் சந்திக்கும் பலர் தலித் சிறுத்தை கள் அமைப்பின் அவசியத்தை இன்றும்என்னிடம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..
உங்கள் வேகத்துக்கு இந்தியக் குடியரசுக் கட்சி ஈடுகொடுக்காது என்று சொன்ன நீங்கள் இன்று அதில்தானே இருக்கிறீர்கள்!
ஆமாம். மராத்திய மாநிலத்தில் வளர்ந்து வரும் சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத், மராத்திய நவ நிர்மான் சேனா, பி.ஜேபி என்று மதம்சார்ந்த அரசியல் சூழலில் ஒரு செக்குலார் அமைப்புக்கான தேவை இன்று அதிகம். அந்த வகையில் நாங்கள் இந்திய குடியரசுக்கட்சியில் சேர்ந்து எங்கள் செயல் பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.
குடியரசுக் கட்சியின் ஒருபிரிவு சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதை எவ்வாறு விளங்கிக் கொள்வது?
RPI இணைந்து நிற்கவில்லை. Rashtriya republican party சிவசேனாவுடன் சேர்ந்து நின்றது. இவர்கள் எப்போதுமே சிவசேனாவுக்கு ஜால்ராஅடிப்பவர்கள்தான். இது ஒரு பல கீனமான அமைப்பு. ஒரு சில இடங்களில் RPIலிருந்து தனிப் பட்ட காரணங்களுக்காகப் பிரிந்த சிலர்சிவசேனையுடன் இணைந்திருக்கலாம்.
இந்த நாட்டில் 1/5 ஆக இருக்கின்ற தலித்துகள் இயற்கை வளங்களில், பொதுச்சொத்தில், பொருளாதர வணிகச்செயல்பாடுகளில் கலை இலக்கிய பண்பாட்டு நடவடிக்கைகளில் உரிய பங்கை அடைவதற்குப் போராடாமல் பிறரோடுசேர்ந்து சில்லறை அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக தலைகளைக் காட்டி பங்கு வாங்கிக் கொள்வதாக தலித்இயக்கங்கள் வலுகுன்றிப் போயிருப்பதை எப்படி விளங்கிக்கொள்வது?
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆட்சிதான் கைமாறியது. மக்களாட்சி, அரசியல் சட்ட உரிமை என்றெல்லாம் வந்த பிறகும்ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற எது தடையாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தலித்மக்களில் படித்த நடுத்தர வர்க்கத் தினர் போராட்டங்களைக் கைவிட்டு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்ள அடிப்படைக்கொள்கைகளை மறந்து விட்டு அரசியல் கட்சிகளுடன் பேரம் பேசி விலை போய்க் கொண்டிருக்கிறார்கள். அனைத்திந்திய தலித்தியஅரசியலமைப்பு/ அல்லது மாநில தலித் இயக்கங்களை ஒட்டுமொத்த இந்திய அளவில் ஒன்றணைக்கும் ஓரமைப்பின் தேவையைஉணர வேண்டும். அப்படி ஓர் அரசியல் சக்தியாக மாற்றம் பெற்றால் மட்டுமே நீங்கள் சொல்வதுபோல நமக்கான உரிய பங்கைநாமடைவது சாத்தியப்படக்கூடும். அதுவரை அவர் கள் தூக்கி எறியும் எலும்புத்துண்டுகளுக்காக காத்திருக்கும்தெருநாய்களாகத்தான் நாமிருப்போம். இந்தப் பூர்ஷ்வா அரசு தன் குடிமக்களை வாழவைப்பதும் இல்லை. சாகவிடு வதும் இல்லை,இரண்டுக்கும் நடுவில் தத்தளிக்கும் வாழ்க்கை. இந்த அரசு வீடு இல்லாதவனுக்கு தண்ணீர்க் குழாயும் மின்சாரமும் வழங்கும்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறது. இம்மாதிரியான சூழலில் அம்பேத்கரின் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் அகிலஇந்திய அமைப்பின் தேவையை நாம் உணரவேண்டும்.
இப்போதைய சூழலில் ஒரு தலித் இயக்கம் அகில இந்திய மட்டத்தில் துவக்கப்படுவதாக இருந்தால் அல்லது இருக்கிறஇயக்கம் தன்னைச் சரிப்படுத்திக் கொள்வதென்றால் அதன் செயல்திட்டத்தில் இடம்பெற வேண்டிய தலையாய அம்சங்கள்என்று எவற்றைச் சுட்டிக்காட்டுவீர்கள்?
அந்தந்த மாநிலத்தின் தலித் இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி அனைத்திந்திய அமைப்புக்கான தேவைபற்றி பேசவேண்டியகாலக்கட்டமிது. அப்படி ஓரமைப்பு நிறுவப் பட்டால் மட்டுமே அரசியல் தளத்தில் அதிகாரப் பகிர்வும் உரிமைகளைப் பெறுவதும்சாத்தியப்படும். அந்த அமைப் பில் ஒத்தக்கருத்துள்ள தலித்தல்லாதவர்களையும் ஒன்றி ணைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.பாபா சாகிப்கூட சாதியடிப்படையில் மட்டுமே ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் இயக்கங்களை முழுமனதுடன் வரவேற்கவில்லை.
தலித் அல்லாதவர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று சொல்லும் நீங்கள் பகுஜன் மாயாவதிசர்வஜன் மாயாவதி ஆனதை விமர்சனம் செய்கிறீர்களே, ஏன்?
பகுஜன் சர்வஜன் ஆனதால் பகுஜனுக்கும் சரி சர்வஜனுக்கும் சரி.. என்ன கிடைத்தது? அதனால்தான் சொல்கிறேன் மீண் டும்சொல்கிறேன் ஒத்தக்கருத்துள்ள தலித் அல்லாதவர்களையும் இணைத்துக் கொண்டு என்று. "ஒத்தக் கருத்துள்ள' (like minded ) என்ற சொல்லை அடிக்கோடிட்டு வாசிக்கவும். தலித்தல்லாதவர்களை இணைத்துக்கொள்ளும் போது ஒத்தக்கருத்துள்ளவர்களாக இருக்கவேண்டியது அடிப்படை விசயம். இல்லை என்றால் நம் தேர்தல் கூட்டணிக்கும் இதற்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்!
தலித் மக்கள் சக்தி வலுவான அதிகாரமாக இந்திய அரசியலில் வளர்ச்சி அடையாமைக்கு என்ன காரணம்?
தலித் நேஷனல் பார்ட்டி கிடையாது. எல்லோரும் ஏற்றுக் கொண்ட தலித் தலைமை அம்பேத்கருக்குப் பின் நம்மிடம் இல்லை.பாபாசாகிப் அவர்களுக்கு தேசியஅளவில் தலித் அமைப்பு ஒன்று வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. டாக் டர் லோகியா, ஆச்சார்யஅதர்லே, சமாஜ்வாடி எஸ்.என். ஜோஷி ஆகியோருக்கு பாபாசாகிப் கடிதம் எழுதினார். ஆக்கப்பூர்வமாக அதைச் செய்வதற்குள் அவர் இறந்து விட்டார். தலித் அமைப்புகளின் மாநிலத்தலைவர்கள் உள்ளூரைத் தாண்டி வரத்தயாராகவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட மாநிலவாரியாக தங்கள் கூட்டணிகளை மாற்றிக் கொண்டாலும் மத்தியஅளவில் ஒன்றாக நிற்கின்றன. குறைந்தபட்சஅடிப்படைக் கொள்கைகளின் அடிப்படை யில் அனைத்து மாநில தலித் அமைப்புகளையும் ஒருங் கிணைக்கும் ஓர் அமைப்புஇன்றைய தேவை. அப்படிப்பட்ட ஓர் அமைப்பு ஏற்படாதவரை தலித் சக்திகளை அரசியல் தலைவர்கள் தங்கள் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வார்கள்.
தலித்துகளுக்குள் நிலவும் சாதிப்படிநிலைகள், உட்சாதிப்பூசல்கள், இட ஒதுக்கீடுக்குள் உள்ஒதுக்கீடு- பற்றி எல்லாம்என்ன நினைக்கிறீர்கள்?
சாதிப்படிநிலைகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. தலித்துகளில் இரண்டுவகை. ஒரு சாரார் இந்து தலித்துகள்.ஜெகஜீவன்ராம் போன்றவர்கள் இதில் அடங்குவர். ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் அம்பேத் கரை இந்து தலித்துகள்ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை! மகர்கள்தான் ரிசர்வேசனை அனுபவித்து முன்னேறி இருக்கி றார்கள். மாத், மதங் என்றுஇங்கேயும் உட்சாதி இட ஒதுக்கீடு குரல்கள் கேட்கின்றன. உள் ஒதுக்கீடுகளில் உள்ள சில நியாயங்களை இந்துத்துவவாதிகள் திசைதிருப்பி ஆதாயம் தேடிக்கொள்வதை அனைத்து தலித் உட்சாதிப்பிரிவினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சேமநல அரசாக இந்திய அரசு முழுமை பெறுவதற்குள் உலகமயமாதலில் கால்வைத்துவிட்டது. இன்று அரசானதுசட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் ஓர் ஏஜென்சியாக மாறிவிட்டது. எனவே ஒடுக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறைசெலுத்த வேண்டும் என்பது பேச்சளவிலும் கூட கைவிடப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு நடைமுறையில்முடக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே தொழில் வணிகம் போன்றவற்றில் தலித்துகளுக்கு வாய்ப்பு குறைவு. மிகுந்தசவால்களுடன் கூடிய இந்த நிகழ்காலத்தை தலித்துகள் எவ்வாறு கடப்பது?
இந்திய அரசு உலகமயமாதலில் நுழைந்தது சரியா தவறா என்று பேசுவது இனி அர்த்தமில்லாதது. வெகுதூரம் வந்தாகி விட்டது.உலகமயமாதலில் இருந்து இனி நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வெளிவருவது சாத்தியமில்லை. அமெரிக்காவிலிருந்துஅறிவியலையும் அணு ஆயுதத்தையும் ஹை டெக்னாலஜியையும் இறக்குமதி செய்திருக்கும் நாம் அமெரிக்க அரசின் சில மனித உரிமைக் கொள்கைகளையும் தனியார் நிறுவனங்களிலும் கறுப்பர்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் முன்னுரிமையையும் சேர்த்தே இறக்குமதி செய்திருந்தால் நல்லது.
ஆனால் உலகமயமாதல் என்றால் அமெரிக்காவுக்கு அடிமையாதல் என்பதல்ல. அந்தப் புரிதல் நமக்கு வேண்டும். உலக மயமாதல்என்றால் நம் இயற்கை வளங்களை அடுத்தவன் கொள்ளை அடிக்க விட்டுவிட்டு நிற்பதல்ல. மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டினால்நம்மால் சில அழிவுகளிலிருந்து காத்துக் கொள்ள முடியும். மராட்டியத்தில் விடியோகோனின் சிறப்பு பொருளாதார மண்டலத்தைமக்கள் சாலையில் இறங்கி தடுத்து நிறுத்திவிட்டார்கள். இவை எல்லாம் நம்பிக்கை தரும் செய்திகள். எனினும் இன்றைக்குதலித்துகளிடம் போராட்டக்குணம் நீர்த்துப்போய்விட்டதோ என்ற அச்சம் எனக்குண்டு. எங்கள் போராட்டங்களைக் கண்டு அரசும்ஆட்சியாளர்களும் அச்சப்பட்ட காலம் ஒன்றுண்டு. அன்றைக்கெல்லாம் ஒரு பிரச்சனை என்றால் சாலையில் இறங்கி நின்றுபோராடிய பொதுமக்கள் இன்றில்லை. தலித் துகளின் வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம்சார்ந்தவர்கள் இன்றைக்கு குடிசை வாழ் தலித்துகளுக்காக போராட சாலையில் இறங்கத் தயாராக இல்லை. போராட்டகுணம்குறைந்துவிட்டது. இன்றைய சூழலில் மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டுவதன் மூலமே நம்மை நோக்கியிருக்கும் சவால்களைஎதிர்கொள்ள முடி யும். ஆனால் அதுவே காணாமல் போய்க் கொண்டிருக்கி றதோ என்ற அச்சம் கவலைத்தருகிறது.
தலித் பெண்களின் தனித்துவமான பிரச்சனைகள் என்று எவற்றை அடையாளப்படுத்துவீர்கள்? தலித் இயக்கங்கள்அவற்றைக் கவனத்தில் கொண்டுள்ளனவா?
போராட்டகளத்தில் நிற்கும் ஒவ்வொரு தலித் ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண்களும் அதே போராட்டகளத்தில் நிற்கும் தலித்அல்லாத ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண் களும் அடிப்படையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை நாங்கள்கவனத்தில் கொண்டிருக்கிறோம். தலித் போராடினால் அவனை அடக்க அவன் வீட்டுப் பெண்டுபிள்ளைகளை வன்கொடுமைசெய்கிறார்கள். அன்றுமுதல் இன்றுவரை தொடரும் கதை இது. தலித் அல்லாத ஆண்மகனின் வீட்டுப் பெண்களுக்கு அடிப்படை யில்இந்தப் பிரச்சனை அதிகமாக இருப்பதில்லை. பெண்ணி யம் பேசும்போதும் தலித் பெண்களின் பிரச்சனைகளை தனித்துவப்படுத்திஇன்று தலித் பெண்கள் முன்வந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இயக்கங்கள் இவற்றை என்றைக்குமே புறக்கணித்ததில்லை.
ஆனால் தலித்திய இயக்கங்களில் பெயர் சொல்லும்படியாக பெண்கள் இல்லையே? ஏன்? நீங்கள் ஆரம்பித்திருந்த தலித்பேந்தர் அமைப்பிலும் பெண்கள் நிர்வாகத்தில் இருந்ததாகத் தெரியவில்லையே
பெண்கள் நிர்வாகத்தில் முன்வரவில்லை. தலைமைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. தலித் பேந்தரிலும் தலை மைக்கு வரவில்லைஎன்பதையெல்லாம் ஏற்றுக்கொள்கி றேன். ஆனால் சாலையில் இறங்கிப் போராட்டமா, பேரணியா.. பெரும்பான்மையான பெண்கள்அக்காலக் கட்டங்களில் கலந்துகொண்டார்கள். இன்று நிலைமை ஓரளவு மாறி வருகிறது. தலைமைக்கு வரவும் நிர்வாகபொறுப்புகளை ஏற்கவும் பெண்கள் தயாராகிவிட்டார்கள்.
இங்கு சிலைகளை வைத்து நடக்கும் அரசியல் அறிந்ததுதான். இது வரை அரசாங்கங்களும் கட்சிகளும் வைத்துள்ளபெரும்பாலான சிலை கள் தலித்தல்லாதவர்களுடையதே. ஊடகங்களில் வெளியாகும் அரசுத் துறை விளம்பரங்களில்ஆளுயரத்திற்கு நின்று புன்னகைப்பதும் இவர்களே. விபத்தில் மறைந்த ராஜசேகர ரெட்டிக்கு 12,000 சிலை களை ஆந்திராமுழுக்க வைக்கப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள் ளது. அரசாங்கமோ, கட்சிகளோ அவை செலவழிக்கிற தொகைபொது மக்களுடையதுதான். ஆனால் இதையெல்லாம் விரயமென்று பேசாத பொதுநல விரும்பிகள், நீதிமன்றங்கள்எல்லாம் மாயாவதியின் சிலை வைப்பு முயற்சிக்கு இப்படி கொந்தளிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ரொம்ப சிம்பிள். அவர் ரெட்டி, இவர் மாயாவதி. மாயாவதி ரெட்டியாக இருந்திருந்தால் இந்தக்கேள்வியே வந்திருக்காது. இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் சொல்லியாக வேண்டும். உ.பி.யில் தலித்துகளுக்கும் பிற சிறுபான்மை மக்களுக்கும் செய்யவேண்டிய உருப்படியான காரியங்கள் நிறைய இருக்கிறது. மாயாவதி தன் அதிகாரத்தையும் ஆற்றலையும் காட்டவும் நிலைநிறுத்தவும் களங்கள் பல உ.பி.யில் இருக்கின்றன. எனவே இந்த சிலை விவகாரத்தில் எல்லாம் தன் நேரத்தையும்ஆற்றலையும் வீணடிக்கக் கூடாது. தொலைநோக்குப்பார்வையுடன் கூடிய எதிர்காலத் திட்டங்களில் அவர் கவனம் செலுத்தவேண்டும்.
மாயாவதியின் அரசியல் வெற்றி தலித் சமூகத்தின் வெற்றியா?
இல்லை. மாயாவதியின் அரசியல் வெற்றிகளை நாமும் ஊடகங்களுடன் சேர்ந்து பாராட்டலாம். ஆனால் ஊடகங்கள் சொல்வதுபோலஅவர் தலித்துகளின் அடையாளம் அல்ல. இந்த வெற்றியை அடைய அவர் கொடுத்திருக்கும் விலை என்ன ? அவரை ஆதரிக்கும் புனே டி.எஸ். குல்கர்னி ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். மாயாவதி தேர்தலில் நிறுத்திய நாசிக் 'மகந்த' ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். இந்தமாதிரி விலையைக் கொடுத்து மாயாவதி தலித் சமுதாயத்திற்கு என்ன செய்து விடப்போகிறார்? அண்மையில் தாதர் சிவாஜி பார்க்கூட்டத் திற்கு வந்தவர் அங்கிருக்கும் அம்பேத்கரின் சைதன்ய பூமிக்குக்கூட போகவில்லை! she lost her dalith idealogy.
சைதன்யபூமி கிட்டத்தட்ட ஒரு வழிபாட்டுத்தலம் போலதானே இருக்கிறது? செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவது, பூ வாங்கி அர்ச்சனை செய்வது இத்யாதி காட்சிகளைப் பார்க்கிறோமே..அம்பேத்கரை நாம் கடவுள் ஆக்கிவிட்டோமோ?
சைதன்யபூமிக்கு வருகிறவர்களுக்கும் திருப்பதிக்கு போய் வருகிறவர்களுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.எதையும் வேண்டிக் கேட்டு, கேட்டது கிடைத்து விட்டால் அதற்குக் கைமாறாக எதையாவது செய்து தன்னை யும் தன் கடவுளையும்ஏமாற்றிக்கொள்ளும் கூட்டமல்ல சைதன்யபூமிக்கு வருபவர்கள். அன்பை, மரியாதையை தங்களுக்குத் தெரிந்தவகையில்வெளிக்காட்டும் மக்கள். தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு தலைவனுக்கு தங்கள் நன்றியை மட்டும் காட்டவரும் மக்கள். மும்பையில் பிறந்து வளரும் நம் வீட்டு பிள்ளைகள் சாதியம் தெரியாதவர்களாக ஏன் சாதியற்றவர்களாக இருக்கிறார்கள். சாதியற்றவர்கள் என்று சொல்வதில் பெருமைதான் எனினும் சாதிப்படிநிலை மாறாத இச்சமூக அமைப்பில் அவர்களுக்கானஇடம்..
இன்று நம்மைப் போன்ற பலர் குடும்பத்தில் இப்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்கன் சிலிக்கன் வேலியில்டாலராக சம்பாதிக் கும் அவாள் வீட்டுக்குழந்தைகள் தங்கள் மேனிலையைக் காப்பாற்றிக் கொள்ள டாலர் டாலராக விஷவ இந்துபரிஷத் மாதிரி அமைப்புகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். நம் தலித்துகளிடம்தான் நவ தலித் பிராமணர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். நம் குடியிருப்பில் எத்தனை தலித்து கள் இருக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு? உங்களையும்என்னையும்போல அவர்கள் தம்மை தலித் என்று சொல்லிக் கொள்வதில்லை. தங்கள் அறிவு, பணம், பதவி இந்த சமூகத் தின்ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு பயன்பட வேண்டும் என்ற சமூக விழுமியத்தை நாம் நம் குடும்பங் களின் தனிமனிதவிழுமியமாகக் கடைபிடிக்க வேண்டும்.
II
இந்து மதத்தின் பிடியிலிருந்து தம்மக்களை விடுவிப்பது என்ற அம்பேத்கரின் அடிப்படை நிலைப்பாட்டை பல தலித்இயக்கங்கள் கைவிட்டு விட்டது எதனால்? இந்துமதம் அவற்றையும் உட்செரித்துக் கொண்டதா?
மிகவும் விரிவாக பேசப்பட வேண்டிய விசயம் இது. பாபா சாகிப் one man one vote என்று அரசியல் சட்டத்தின் மூலம் சமஉரிமைகொடுத்த பிறகுதான் பவுத்தம் தழுவினார். அப்படியானால் அரசியல் சட்டம் மட்டுமே சமூகத்தில் சம உரிமையை தம் மக்களுக்குகொடுக்க முடியாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். மராட்டியத்தில் தலித்துகள் மகர், சம்பார், மாத் என்று மூன்று பெரும்பிரிவுக்குள் அடங்குவர். இதில் மகர் பிரிவினர் முதலில் அம்பேத்கரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு சமூகத்தளத்தில் சமஉரிமைப்போராட்டக் களத்தில் முன் நின்றார்கள். அதனால்தான் காங்கிரசு இயக்கம் கூட மகர் அல்லாத ஜெகஜீவன்ராம் அவர்களை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்துவதற்காகவே வளரவிட்டது. இந்தப் பிரிவுகளில் ஒருசாரார் அம்பேத்கரை ஏற்றுக்கொள்வதில் தயக்கம்காட்டினார்கள். இன்றும் அவர்களைப் பயன் படுத்திக் கொண்டுதான் சிவசேனை, பாரதிய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் "இந்து தலித்துகள்" என்ற முத்திரையுடன் நம் மக்களைப் பிளவுபடுத்தி இருக்கிறார்கள். அம்பேத்கர்கூட அரசியல் களத்தில்அவருடன் எவ்விதத்திலும் ஒப்புமைப்படுத்த தகுதியில்லாத வேட்பாளருடன் போட்டியிட்டு மும்பையில் தோல்விஅடைந்திருக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் தலித் அரசியல் இயக்கங்களையும் பவுத்தத்தையும் இணைத்து பார்க்கும்யதார்த்தத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை யோசித்துப் பாருங்கள்.
ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். நானே சட்டசபை தேர்தலில் நிற்பதாக வைத்துக் கொள்வோம்.என் தொகுதியில் இருக்கும்அனைத்து வாக்காளர்களையும் சந்திக்கும்போது அதில் சிலர் கணபதி கோவிலுக்கு அழைத்து அர்ச்சனை செய்யலாம். சிலர் மசூதிக்குஅழைக்கலாம். அவர்களுடன் சேர்ந்து நோன்பு கஞ்சி குடிக்கலாம்... இதை எல்லாம் எவ்விதமான தடைகளுமின்றி இந்துமதவேட்பாளரால் செய்ய முடிகிறது. இதையே நான் செய்தால் அது கேள்விக் குறி ஆவது தவறு. இன்னொரு முக்கிய விசயத்தையும்கவனிக்கத் தவறிவிட் டோம். நீங்கள் (புதியமாதவி) படித்தவர், தொலைக்காட்சி பார்க்கவும் நேரமில்லாமல் வாசிப்பு, கருத்தரங்கு,இலக்கியம் என்று உங்கள் நேரத்தைக் கழிக்க முடிகிறது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் கதி? அவர்களுக்கான வடிகால்?எனக்குத் தெரிந்து பவுத்தம் தழுவிய நன்கு படித்த குடும்பங்கள்கூட வெளியில் பவுத்தம் சார்ந்தும் குடும்பத்தின் பழக்கவழக்கங்கள்,சடங்கு சம்பிரதாயங்களில் ஒரு இந்துவாகவும் இருக்கிறார்கள். கண்பதி உற்சவங்கள், தசரா கொண்டாட்டத்தின் ஆடல் பாடல்கள்,தயிர்ப்பானை உடைக்கும் கோவிந்தா கோவிந்தா விளையாட்டு... இப்படி யான கொண்டாட்டங்களை தன்னுள் வைத்திருப்பதால்சாதாரண மனிதனுக்கு ,கொண்டாட்டங்களுடன் கூடிய வாழ்க்கையை அனுபவிக்க ஏங்கிக்கொண்டிருக்கும் வெகு மக்களுக்கு இந்துமதத்தில் இம்மாதிரியான வடிகால்கள் இருக்கின்றன.
பவுத்தத்தில் புத்தபூர்ணிமா, அம்பேத்கர் ஜெயந்தி தவிர்த்து கொண்டாட எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதனும் வாழ்க் கையைகொண்டாட்டங்களுடன் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவே விரும்புகிறான். அந்த உளவியலை மிகவும் சரியாகப் புரிந்து கொண்டதால்மட்டுமே இந்துமதம் இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி இன்றும் மக்களைக் கவர்ந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.
பவுத்தம் ஒரு மதம் அல்ல, அது ஒரு வாழ்வியல் முறை, அறி வியல் சார்ந்த பகுத்தறிவு சார்ந்த ஒரு வாழ்க்கை முறை. பவுத் தத்தில்புத்தபகவானிடம் நீங்கள் வரமெல்லாம் கேட்கும் வாய்ப்புகளே இல்லை! தனிமனிதன் கடவுளை நம்புவதும் கும்பிடுவதும் பேரம்பேசுவதும் எனக்கு நீ இதைக் கொடு நான் உனக்கு இந்தப் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் கேட் பதும் பவுத்தத்தில் சாத்தியமேஇல்லை. தனிமனிதனை, அவ னது சிந்தனைகளையும் மீறிய சில உளவியல் தாக்கங்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கின்றன. இந்தஇடத்தில்தான் வெகுஜனமும் அவர்களின் உளவியலும் பவுத்தம் போன்ற அறிவியல் சார்ந்த பகுத்தறிவு வாழ்வியலுக்கே சவாலாகஅமைந்துவிடுகிறது. இதில் பார்த்தீர்கள் என்றால் இன்னொரு வேடிக்கை. என்னவோ விவரம் தெரியாத நம்வீட்டு பெண்களோமுதியவர்களோ மட்டும் இப்படி இருக்கிறார் கள் என்று சொல்வதற்கில்லை. அறிவியலில் கரைகண்ட இன்றைய நம் இளையதலைமுறையும் பவுத்தத்தைப் புரிந்து கொண்டும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று ஒத்துக்கொண்டும் தசராகொண்டாட்டத்தில் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்.. அம்மாதிரியான கொண்டாட்டங்கள் அவர்களுக்கும் பெரிதும் தேவைப்படுகிறது..
ஒருகாலத்தில் தலித்துகள் கும்பிட்ட சிறுதெய்வங்கள் காணாமல் போய்விட்டன. அவர்களைப் போலவே இருந்த அவர் களின்கோரமுக தெய்வங்களை அவர்கள் மறந்து பலகாலம் ஆகிவிட்டது. அலங்காரங்களுடன் கூடிய பெருந்தெய்வ வழிபாட்டுக்குவந்துவிட்டார்கள். உங்களுக்குத் தெரியுமா.. பத்துப்பதினைந்து வருடத்திற்கு முன் மும்பையில் சித்தி விநாயகர் கோவில் குறித்துயாருக்கும் தெரியாது. இன்று பாருங்கள் அந்தக் கோவிலுக்கு வந்திருக்கிற மவுசை! ( நான்: ஆமாம்.. அசோக்சவான்கூடமுதலமைச்சரானவுடன் சித்தி விநாயகர் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்திருக்கிறாரே.. பார்த்தீர்களா..?)
ஒரு மதமும் அது சார்ந்த கருத்துருவாக்கமும் பொதுமக்களிடம் பரவ அரசு எந்திரங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. சக்கரவர்த்திஅசோகர் பவுத்தம் தழுவிய பின் இந்திய மண்ணில் பெரும்பகுதி அவர் அரசாட்சியில் இருந்ததால் பவுத்தம் வேகமாகப் பரவியது.என்னதான் செக்குலர் பேசினாலும் இந்திய அரசும், ஊடகங்களும் இந்துத்துவா சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கின்றன.இம்மாதிரியான புறம் சார்ந்த காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பலசமயங்களில் இதனால் தான் நான்அடிக்கடி சொல்வதுண்டு, இயக்க அரசியலையும் தனிமனித மத நம்பிக்கைகளையும் சேர்த்து குழப்பிக்கொள்ளக் கூடாது. மதம்அகம்சார்ந்தும் அரசியல் புறம்சார்ந்தும் சமூகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றை இன்னொன்று ஆட்சி செய்யவோ அடக்கிஆளவோ முயற்சிக்கும் போது கலவரங்கள் நடக்கின்றன.
எனில் அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் தோல்வி அடைந்துவிட்டதா?
இல்லை. அது அன்றைய தேவை. இன்று பவுத்தம் அடுத்தக் கட்ட நகர்வுக்கு/ மாற்றத்திற்கு உள்ளாக வேண்டிய தேவைவந்திருக்கிறது.
பவுத்தம் தழுவிய தலித்துகளை இன்றும் neo buddist என்று தனித்து தான் அடையாளப்படுத்துகிறார்கள். எனவேமதமாற்றம் தீர்வாக இருக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட சூழலில் தலித்துகள் எல்லா மத அடையாளங்களையும்துறக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளதா?
எல்லா மத அடையாளங்களையும் துறப்பது என்ற தீர்வு என்றைக்குமே வெகுஜனத்திற்கான தீர்வாக இருக்கவே முடியாது. எனவேதான் தலித்துகள் அனைவரையும் நாத்திகராக் காமல் பாபாசாகிப் அறிவியலும் பகுத்தறிவும் சார்ந்த வாழ் வியல்தத்துவங்களைப் போதித்த பவுத்தம் தழுவினார்.
நீங்கள் பவுத்தம் ஏற்றபின் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் கண்டீர்கள்? உங்களை நியோ புத்திஸ்ட் என்றுதானேஅழைக்கிறார்கள்?
50 வருடங்களில் மிகப்பெரிய மாற்றங்களை, நம்பிக் கையை,சுயமரியாதையை, உத்வேகத்தை ஆற்றலை எங்களுக்கு பவுத்தன் என்ற அடையாளம் கொடுத்திருக்கிறது. உலக வரலாற்றில் இந்த மாதிரி ஒன்றை உங்களால் சொல்ல முடியாது. அதனாலேயேஎல்லா கொடுமைகளும் முடிவு பெற்றுவிட்டது என்று நாங்கள் நினைத்து எங்களை ஏமாற்றிக்கொள்ளவில்லை. பவுத்தம் ஏற்றகயர்லாஞ்சி பய்யாலால் கதை உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்காக அவர்களுக்காகப் போராடும் உத்வேகத்தை அறிவாற்றலைஎங்களுக்கு பவுத்தம் கொடுத்திருக்கிறது.
சாதியொழிப்பு சாத்தியம்தானா? அல்லது அதை ஒரு தொலைதூர லட்சியமாக வைத்துக்கொண்டு சாத ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதில் தலித்துகளின் ஆற்றல் கழியுமா?
புத்தர் காலத்திற்கு முன்பே சாதி அமைப்பும் தீண்டாமையும் சமூகத்தில் வந்துவிட்டது. 2500 ஆண்டுகால ஒரு சமூக அமைப்பைமாற்றுவதும் மக்கள் அடிமனதில் ஊறிப்போன சாதிய வேர்களை அறுப்பதும் அவ்வளவு எளிதான காரிய மல்ல. இது ஒரு தொடர்போராட்டம்தான். சரி, நீங்கள் கேட் பது போல இப்படியான தொடர் போராட்டங்களில் நம் ஆற்றல் கழியுமா என்றால் இல்லை. இந்தப்போராட்டங்கள் தான் நம் மக்களைத் தூக்கிப்பிடித்து தாங்கி நிற்கும் தூண்கள். இவை சரிந்துவிட்டால் ஏறிய உயரத்தைவிட வேகமாகஅதல பாதாளத்தில் மீண்டும் நாம் தள்ளப்படுவோம். மொரிஷியஸ் தீவுக்குப் போனவர்கள் இன்று தங்கள் மூதாதையரின் சாதிஅடையாளத்தைத் தேடி அலைவதாக வாசித்திருக்கிறேன். இந்துமதம் இருக்கும்வரை இந்தியாவில் சாதியும் இருக்கும்.
III
தலித் இலக்கியம் புழக்கத்திலிருந்த மையநீரோட்டத்தில் இணைந்து விட்டதா? அல்லது தனித்துவத்தோடு வளர்நிலையை எட்டியிருக்கிறதா?
தலித் இலக்கியம் மைய நீரோட்டத்தில் இணைந்துவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் தலித் இலக்கியம்இலக்கியத்தின் ஒருவகை. மராட்டிய இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் அதில் தலித் இலக்கியம் என்பது மராட்டிய இலக்கியத்தின்ஒருவகை. மற்ற இலக்கியங்களில் ஏற்பட்டிருக்கும் இசம், உத்தி மாற்றங்கள் தலித் இலக்கியத்தி லும் மாற்றத்தை ஏற்படுத்திஇருக்கின்றன.
தலித் இலக்கியம் வடிவத்திலும் பேசுபொருளிலும் அடைந்துள்ள மாற்றங்கள் என்று எவற்றை அவதானிக்கிறீர்கள்?
மராத்தி இலக்கியத்தை உலகத்தரம் வாய்ந்த இலக்கியமாக் கியதில் தலித் படைப்பாளர்களின் பங்கு மகத்தானது. ஆரம்பகாலங்களில் எடு துப்பாக்கியை, வெடிக்கட்டும் தோட்டா, குண்டுமழை, ரத்தம், காயம் என்று எழுதிக் கொண்டிருந் தோம். இன்றுஅப்படி எழுதுவதில்லை. இலக்கியத்தின் அனைத்து உத்திகளையும் தலித் இலக்கியம் தனக்குள் வாங்கி செரித்து நிற்கிறது. மத்தியவர்க்கம், உயர்தர மத்திய வர்க் கம்,கூட்டுக்குடும்பச் சிதைவு, உலகமயம் என்று பல்வேறு தடங்களில் கிளை பரப்பி நிற்கிறது. பெண்கவிஞர்களின் பங்களிப்பு பெருமை சேர்த்துள்ளது. சத்யா பவார், ஊர்மிளா பவார் எழுத்துகளை எல்லாம் குறிப்பிட்டு சொல்லலாம்.இன்னொரு பெரிய மாற்றம் அன்று எழுதியவர்கள் இயக்கம் சார்ந்த களப்பணியாளர்கள். இன்று அப்படியில்லை.
தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை?
தலித் இயக்கம் தலித் இலக்கியம் என்பது ஓர் உணர்வு, சமூக மாற்றத்தை விரும்பும் ஓரியக்கம். இதற்குள் பௌத்த இலக்கியமும்இடம் பெறலாமே தவிர தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக அடையாளப்படுத்தமுடியாது.
தலித் படைப்புகள் ஒரே சாயலில் -ஸ்டீரியோ டைப்- ஆக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பொதுவாக வைக்கப்படுகிறதே?
ஆரம்பகாலங்களில் இப்படி எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். இன்றைக்கு மகர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு மராத்தாக்களும்தங்கள் யதார்த்த வாழ்க்கையை எழுதத் துணிந்தார்கள் என்பது தான் உண்மை. புதிய சொல்லாக்கங் களை, பழைய சொற்களுக்குப்புதுப்புது அர்த்தங்களை எங்கள் படைப்புகள் தான் மராத்திய மொழிக்கு கொடுத்திருக் கிறது. இன்றைக்கு மராத்திய அரசு தலித்இலக்கிய சொல் லாடல்களுக்கு தனி அகராதியே கொண்டுவரப்போகிறது என்றால்.. அந்தளவுக்கு இந்த மொழியை நாங்கள் வசப்படுத்தியிருக்கிறோம்!
நாராயண் சுர்வேயின் கவிதைகள் ஃபக்தா சிறுபத்திரிகையில் வெளி வந்தன. சிறுபத்திரிகைகளின் பங்களிப்பையும்மராத்திய இலக்கியத்தில் ரொம்பவும் முக்கியமானதாகச் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?
உண்மைதான் சிறுபத்திரிகைகளின் பங்களிப்பு அதிகம். நான்கு நண்பர்கள் சேர்ந்தால் உடனே ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிப்பது, சிலகாலம் வரும் பிறகு நின்று போவது எல்லாம் நடந்தது. கோபங்கொண்ட இளம் தலைமுறையினரால் ஆரம்பிக்கப்பட்டசிறுபத்திரிகைகள் நாளடைவில் தனி நபர் ஆதிக்கத்துக்குட்பட்டன. அதனால் அந்த இயக்கம் தோற்றுப்போனது என்று வைத்துக்கொண் டாலும் சதீஸ் கலேஸ்கர், துளசிபரப் , ராஜா தலே என்று பல எழுத்தாளர்களை அடையாளம் காட்டியதில் அதன் பங்குமகத்தானது.
மூன்றுவகையான தலித் எழுத்தாளர்களை இன்று காணலாம். ஒன்று: கல்லூரி பேராசிரியர்கள். இரண்டாவது வொயிட் காலர் ஆபீஸ்மக்கள். மூன்றாவது தொழிலாளர்கள். சில சமயங்களில் எனக்கு அச்சம் ஏற்படுவதுண்டு. தலித் இலக்கியம் ரொம்பவும் (academic level)அகடெமிக் இலக்கியமாகிக் கொண்டிருக்கிறதோ என்று. தலித் இலக்கியம் தலித் இயக்கம் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதுதான்என் போன்றவர்களின் விருப்பம்.
தொடக்கத்திலிருந்த படைப்பு உத்வேகம் இப்போதும் உங்களிடமிருக்கிறதா? தங்களின் சமீபத்திய படைப்பு முயற்சிகள் எவை?
நான் 1967 களிலேயே இயக்கம் சார்ந்து செயல்படவும் எழுதவும் ஆரம்பித்துவிட்டேன். 67களில் ரிபப்ளிகன் ஐக்கிய பார்ட்டியுடன்சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். என்ன அன்றுபோல உத்வேகத்துடன் ஓடிய ஓட்டம் இன்று களப் பணியில் சற்றுகுறைந்திருக்கலாமே தவிர எழுத்துப் பணி எப்போதும் போல தொடர்கிறது. அண்மையில் என் கட்டுரைகளின் தொகுப்பு நூல் (neh abivithi - blue underline) வெளிவந்துள்ளது.
நாடு தழுவிய அளவில் தலித் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கான செயலூக்கம் கொண்ட ஒரு கூட்டமைப்பின் தேவையை உணர்கிறீர்களா? அதற்கான முன் முயற்சிகளைத் தங்களைப் போன்றவர்கள் ஈடுபடுவது தானே வலு சேர்ப்பதாக இருக்கும்?
பலமுறை இதைப்பற்றி நாம் பேசி இருக்கிறோம். ஒருமுறை தமிழகத்தில் பிரிந்துகிடக்கும் தலித்திய இயக்கங்களை ஒன்றிணைக்கநான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூட நாம் பேசியிருக்கிறோம். நான் பேசுவது மட்டுமல்ல .. உங்களைப் போன்றவர்களும் முன்வர வேண்டும்.
மராத்தியில் தன்வரலாற்று இலக்கியவகை ரொம்பவும் பிரசித்தமானது. உங்களுடைய சுயசரிதையை எப்போது எதிர்பார்க்கலாம்?
(சிரித்துக்கொண்டே..) என் சுயசரிதம் என்பது நானும் என் குடும்பமும் என் எழுத்துகளும் மட்டுமல்ல. என் வாழ்க்கை ஓர் இயக்கம் சார்ந்தது. எங்கள் இயக்கம் குறித்தும் , என் தோழர்கள் குறித்தும் நிறைய உண்மைகளை எழுத வேண்டியிருக்கும். அப்படி எழுதாமல் இருந்தால் அது சுய சரிதையாக இருக்கவும் முடியாது. என்ன.. அதனால்.. புனைவுகளின் ஊடாகப் பயணித்து ஒரு நாவல் எழுதலாம்என்ற எண்ணமிருக்கிறது.
***
(புதுவிசை அக்டோபர் 2009 இதழில் வெளிவந்த நேர்காணல்)
|
- |
#05.SCIENTIST
ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை.
பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை.
தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார்.
அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது,
கால் தடுக்கிக் கீழே விழ ,
கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய்
சாக்கடையில் விழுந்தன.
என்ன செய்வது என்று யோசித்த போது கிழிந்த ஆடையுடன்
ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான்.
அவரிடம் "ஐயா! என்ன ஆயிற்று?" என்று கேட்டான்.
அந்த விஞ்ஞானி மனதில் இந்த அழுக்கடைந்த சாக்கடையில் இறங்க இவன் தான் சரியான ஆள் என்றெண்ணி அவனிடம்,
" இந்தக் சாக்கடையில் விழுந்த போல்ட்டுகளை எடுத்து
கொடுக்க முடியுமா......??
எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றார்.....!!
அதற்கு வழிப்போக்கன்
"இதுதான் உங்கள் பிரச்னையா......?
அந்தக் சாக்கடையில் இறங்கி எடுத்துத்தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.
ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது........!!
மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு போல்ட்டைக் கழற்றி
இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியைத் தயார்
செய்து கொள்ளுங்கள்.......!!!
வண்டியை ஓட்டிச் சென்று,
அருகில் உள்ள மெக்கானிக் கடையில்,
4 போல்ட் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்" என்றான்
விஞ்ஞானிக்குத் தூக்கி வாரிப் போட்டது.......!!!
நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாய் இருந்தும்,
இந்த சுலபமான வழி புலப்படாமல் போனதே.........!!!
இவரைப்போய் ,
குறைத்து மதிப்பிட்டு விட்டோமே ........
என்று
தலை குனிந்தார் விஞ்ஞானி......!
உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு.........!!!!!!!
உயிரற்ற பறவையோ எறும்புக்கே உணவு.........!!!!!
*நேரமும் சூழலும் எப்போதும் மாறலாம்.........!!!*
*யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்........!!!!*
|
#06.RAJALAXMI MURDER..22/10/2018
...ENGLISH.TOI ஆத்தூர் அருகே பயங்கரம்; பள்ளி மாணவி கழுத்தறுத்து ரோட்டில் வீச்சு! ஆத்தூர் அருகே, பள்ளி மாணவியை கதற கதற கழுத்தை அறுத்துக் கொலை செய்ததோடு, தலையை துண்டித்து நடு சாலையில் வீசிவிட்டு தப்பியோடிய வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்த குழந்தைவேல் மகன் தினேஷ்குமார். நெல் அடிக்கும் இயந்திர ஆபரேட்டராக கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சாரதா. இவர்கள் வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள தெற்குக்காடு பகுதியில் சாமிவேலு & சின்னப்பொண்ணு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அக்டோபர் 22, 2018ம் தேதி (திங்கள் கிழமை) இரவு 7.30 மணியளவில் சின்னப்பொண்ணுவும், அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த அவருடைய மகள் ராஜலட்சுமியும் (14) வீட்டுக்குள் அமர்ந்து பூக்கட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று தினேஷ்குமார் கையில் அரிவாளுடன் அந்த வீட்டுக்குள் நுழைந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியின் தலை முடியைப் பிடித்து தூக்கினார். சின்னப்பொண்ணு தடுக்கச் சென்றபோது, அவரை ஆக்ரோஷமாகப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டுவிட்டு, சிறுமியை கதற கதற கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பிறகு, ஆவேசமாக தலையை மட்டும் தனியாக துண்டித்துக்கொண்டு, அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் கொண்டு சென்று நடு சாலையில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகர காவல்துறை ஆய்வாளர் கேசவன் மற்றும் காவலர்கள், நிகழ்விடம் விரைந்து சென்றனர். தலை வேறு, உடல் வேறாக கிடந்த சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்தில், ரத்தம் தோய்ந்த உடையுடன் வீட்டுக்குள் வந்த தினேஷ்குமாரை அவருடைய மனைவி சாரதா, கையும் களவுமாகப் பிடித்து, இருசக்கர வாகனத்தில் அமர வைத்து, காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையிடம் சாரதா கூறுகையில், ''வரும் வழியில் என் பெயர் என்ன என்றும், எங்கள் குழந்தையின் பெயர் என்ன என்றெல்லாம் கேட்டுக்கொண்டே வந்தார். திடீரென்று அவராகவே பேசுகிறார். அவர் நிதானமாகவே இல்லை. வீட்டில் தனியாக இருக்கும் என் குழந்தையையோ அல்லது எங்களையோ ஏதாவது செய்து விடுவார் என்பதால் காவல்துறையில் ஒப்படைக்க கூட்டி வந்தேன்,'' என்றார். நெல் அறுவடை இயந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ்குமார் கடந்த சில நாள்களாக புத்தி பேதலித்தவர்போல இருந்ததாகக் கூறப்படுகிறது. வேலைக்குப் போன இடத்தில், திடீரென்று சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்போல நடந்து கொண்டதால், இயந்திர உரிமையாளர் அவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டதும் தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயார், சம்பவத்தன்று மாலையில்தான், தினேஷ்குமார் வீட்டுக்குச் சென்று பூக்கட்டுவதற்குத் தேவையான நூல்களை வாங்கி வந்ததாகக் கூறியுள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் எதற்காக சிறுமியை கழுத்து அறுத்துக் கொலை செய்தார்? என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். |
#07.JAYASREE..-10/05/2020
‘அப்பா.. தொண்டை வறண்டு போச்சுப்பா’.. கண்கலங்க வைத்த விழுப்புரம் சிறுமியின் ‘இறுதி’ நிமிடங்கள்..! முகப்பு > செய்திகள் > தமிழகம் By Selvakumar | May 12, 2020 05:54 PM விழுப்புரம் சிறுமி இறப்பதற்கு முன் கொடுத்த மரண வாக்குமூலம் அனைவரின் மனதையும் ரணமாக்கியுள்ளது. 15 year old Villupuram girl Jayashree\'s Last minute விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அடுத்த சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி ராஜி. இந்த தம்பதியினரின் மூத்த மகள் ஜெயஸ்ரீ (15) உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், கலியப்பெருமாள் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுமி ஜெயஸ்ரீ இறுதியாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் மனதையும் ரணமாக்கியது. அதில், சிறுமி ஜெயஸ்ரீயை வீடியோ எடுப்பவர் ‘உன் பேரு என்னம்மா?’ என கேட்க, அதற்கு ‘அண்ணா.. தண்ணி குடுங்கண்ணா..’ என ஜெயஸ்ரீ வலியுடன் தண்ணீர் கேட்கிறார். மீண்டும் அவர் ‘தண்ணீர் குடுப்பாங்க.. உனக்கு எப்டி ஆச்சு இப்டி?’ என கேள்வி கேட்க, உடனே ஜெயஸ்ரீ ‘அப்பா... அப்பாவ்.. அந்த யாசகனும் அந்த முருகனும் கொளுத்திட்டாங்கப்பா..’ என சொல்லி ‘தண்ணி தாயேன்பா..’ என மீண்டும் தண்ணீர் கேட்கிறார். அப்போது வீடியோ எடுப்பவர், ‘எதுக்கு உன்னை இப்டி செய்தார்கள். எப்டி எரிச்சிக்கிட்ட?’ என கேட்க, ‘கையெல்லாம் கட்டிப் போட்டுட்டாங்கப்பா..’ என சிறுமி பதிலளிக்கிறார். அப்போது அவர் ‘எதுக்கு கையை கட்டிப் போட்டாங்க?’.. என கேட்க ‘அய்யோ.. தண்ணி தாங்க’ என அழுதுகொண்டே சிறுமி ஜெயஸ்ரீ இருமுகிறார். மீண்டும் வீடியோ எடுப்பவர் ‘தண்ணி குடுப்பாங்கம்மா.. எப்டி கட்டிப் போட்டாங்க’ என கேட்க ‘அப்பா.. தொண்டைலாம் வறண்டு போச்சுப்பா’ என சிறுமி அழுகிறார். வீடியோ எடுப்பவர் மறுபடியும் எதுக்கு கட்டிப்போட்டார்கள் என கேள்வி கேட்க, ‘தண்ணி தந்தாதானே பேச முடியும். எப்பாவ் கொஞ்சூண்டு தாங்களேன்’ என அழுகுரலில் கெஞ்சுகிறார். வீடியோ எடுப்பவர் ஒரு மூடியில் தண்ணீர் கொடுங்கள் என அங்கிருந்த செவிலியரிடம் கூறினார். அப்போது ‘நிறைய தண்ணி தாங்க’ என சிறுமி ஜெயஸ்ரீ மெல்லிய குரலில் கேட்கிறார். தண்ணி குடித்ததும், ‘இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்’ என சிறுமி கேட்டார். அப்போது மீண்டும் ‘எதற்கு கட்டிப் போட்டார்கள்’ என வீடியோ எடுப்பவர் கேட்டார். அதற்கு ‘ஏற்கனவே சண்டை. எங்க அப்பாவுக்கும், அவங்களுக்கும்’ என ஜெயஸ்ரீ பதிலளித்தார். அப்போது ‘நீ ஏன் அதற்கு கொளுத்திகிட்ட’ என அவர் கேட்க, ‘நான் இல்லை. அந்த முருகனும், யாசகனும்தான் என்னை கொளுத்துனாங்க. பெட்ரோலை எடுத்து ஊத்திட்டாங்க’ என சொல்லி கடைசியாக ‘அப்பா ரொம்ப தண்ணி தாகம் எடுக்குதுப்பா...’ என்ற வார்த்தையுடன் தனது இறுதி மூச்சை நிறுத்துக்கொண்டார் சிறுமி ஜெயஸ்ரீ. சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதன் விளைவாக, தேசிய குழந்தைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து, ஒரு வாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. JAYASREE.NEWS.2 A 14-year old girl, who was set ablaze in her home by two men over to a property dispute with her family, succumbed to severe burn injuries at the Villupuram Government Medical College and Hospital on Monday. Cops have arrested two men who are allegedly linked to Tamil Nadu’s ruling AIADMK party. It is said that the girl’s family and those of the attackers have had disputes for several years. According to the Police, on Sunday, two men had entered the home of a teenage girl, identified as Jayashree, and doused her in a flammable liquid before setting her ablaze. As the girl was alone at her home, her screams had alerted their neighbours came to the rescue. She was immediately rushed to the Government hospital, where she was admitted with over severe burn injuries. Villupuram Superintendent of Police S Jayakumar said that they have arrested Kaliyaperumal and Murugan in connection with the incident, based on the statement of the victim. “The family of the girl and her attackers are from the same community and have known each other for a long time. There have been long-standing disputes between their families. About eight years ago, the victim’s uncle’s hand was chopped off in a dispute,” Superintendent Jayakumar told WION. He also confirmed that the two arrested persons are linked to the ruling AIADMK. In a video clip of the girl’s statement, she is heard saying that she was lying down at her home and that the two men, including Murugan, had tied her hands and legs and set her on fire. She is also seen making a mention of the rivalry between them and her father. Police are probing the incident further. |
#08..ELAVARASAN MURDER.04/07/2013 இளவரசன்-திவ்யா கலப்புத் திருமண சர்ச்சை https://ta.wikipedia.org/s/32rj இளவரசன்-திவ்யா திருமணச் சிக்கல் என்பது தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் இளவரசனும் செல்லன் கொட்டாயில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்துத் திருமணம் செய்ததை அடுத்து உருவான சிக்கல்களைக் குறிக்கும். திவ்யாவின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இத்திருமணம் நடைபெற்றது. நவம்பர் 7ந் தேதி இரு வீட்டாரின் உறவினர்களும் தொப்பூரில் சந்தித்து பேசியபோது திவ்யா திவ்யாவின் அம்மாவுடன் செல்ல மறுத்து விடுகிறார். இதனையடுத்து அக்கூட்டத்திற்கு வராத திவ்யாவின் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்நிகழ்வுகளுக்கான எதிர்வினை சாதிக் கலவரமாக உருவெடுத்தது. 7.11.2012 அன்று இந்த இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு, நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டாம்பட்டி பகுதி மக்களின் வீடுகள் மற்றும் உடைமைகளைச் சிதைத்துத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. 296 தலித் சமூகத்தினரின் குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டன. திருமணம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளவரனுக்கும் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த திவ்யாவுக்கும் காதல் ஏற்பட்டு அக்டோபர் 8,2012 அன்று வீட்டை விட்டு வெளியேறி அக்டோபர் 10,2012 அன்று திருப்பதியில் திருமணம் செய்து கொள்கிறார்கள். அக்டோபர் 8,2012 அன்று காவல்துறை அதிகாரியை சந்தித்து தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காவல் கேட்கிறார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்று காவல் அதிகாரி அவர்கள் பாதுகாப்புக்கு காவலர்களை ஏற்பாடு செய்கிறார். வழக்குகள் திவ்யாவை இளவரசன் கடத்திச் சென்று விட்டதாகச் சொல்லி திவ்யாவின் குடும்பத்தினர் வழக்கு தொடுத்தார்கள். திவ்யாவை அறமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற ஆட்கொணர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, தான் விரும்பியே இளவரசனுடன் சென்றதாக திவ்யா தெரிவித்தார். திருமணத்துக்கு அடுத்துச் சில மாதங்கள் தமிழகத்துக்கு வெளியே ஒளிந்து வாழ்ந்து வந்த திவ்யாவும் இளவரசனும் தரும்புரி திரும்பி இளவரசனின் தந்தையின் வீட்டில் வாழத் தொடங்கினர். இடைப்பட்ட காலத்தில் திவ்யாவின் தாய் அவருடன் தொலைபேசியிலும் நேரிலும் கண்டு பேசி வந்துள்ளார். ஒரு முறை இளவரசன் வீட்டில் இல்லாத போது, திவ்யாவின் தாயுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி திவ்யாவை வீட்டை விட்டு வெளியே வரச் செய்துள்ளனர். அதற்குப் பிறகு, திவ்யா இளவரசனுடன் இணைந்திருக்கவில்லை. அதன் பிறகான அறமன்ற அமர்வுகளில் திவ்யா முன்னுக்குப் பின் முரணாகவும் குழம்பிய நிலையிலும் வாக்குமூலம் கொடுத்தார். முதல் முறை, தனக்கு குழப்பமாக உள்ளதாகத் தெரிவித்து அறமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். அடுத்து ஒரு முறை தன் தாய் விரும்பினால் இளவரசனுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகத் தெரிவித்தார். இறுதியாக சூலை 3, 2013 அன்று கொடுத்த வாக்குமூலத்தில் தான் இறுதி வரை தன் தாயுடனேயே வாழ விரும்புவதாகத் தெரிவித்தார். இவ்வாறு அவர் உடனுக்குடன் மாற்றி மாற்றித் தெரிவித்த வாக்குமூலங்கள் யாவும் அவர் கடுமையான உள நெருக்கடியில் சிக்கியிருப்பதையும் குடும்பத்துக்கு வெளியே உள்ள ஆட்களின் வற்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்பதையும் காட்டுவதாக நோக்கர்கள் கருதுகிறார்கள். இளவரசனின் மரணம் திவ்யா இனி இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று பேட்டியளித்த மறுநாள் ( சூலை 4, 2013) நண்பகலில், இளவரசன் தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்குப் பின் உள்ள இருப்புப் பாதையில் பிணமாகக் கிடந்தார். இவரது இறப்பைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் உத்தரவிட்டார். உடற்கூறு பரிசோதனையில் தலையில் அடிபட்டு அவர் இறந்ததாக அறிக்கை வெளியானது . இளவரசன் தனது முழுகால் சட்டையில் 4 பக்க கடிதம் ஒன்றை வைத்திருந்தார், இதில் தன் மரணத்திற்கு மற்றவர்கள் காரணமில்லை என்று தெரிவித்திருந்தார். இளவரசன் உறவினரிடம் இருந்து இக்கடிதத்தை கைப்பற்றிய காவல்துறை இக்கடிதம் இளவரசன் எழுதியதா என்று கண்டறிய தடவியல் சோதனை சாலைக்கு அனுப்பினர், அதில் இக்கடிதத்தில் உள்ளது இளவரசன் கையெழுத்தே என்று முடிவு வந்தது. இறப்புத் தொடர்பான வழக்குகள் இளவரசனின் இறப்புக்குப் பின் பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இளவரசனின் உடற்கூறு சோதனை கோயம்புத்தூர் அல்லது சென்னையில் நடைபெறவேண்டும் என்று சங்கரசுப்பு தலைமையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் உடற்கூறு சோதனையின் முடிவுகளையும் வீடியோ ஆதாரங்களையும் இளவரசனின் தந்தையிடம் ஒப்படைக்கவேண்டும், அவரது உடலைபாதுகாத்து வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. மற்றொரு வழக்கில் திவ்யாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும், மன அழுத்தங்களைப் போக்க மனநல மருத்துவரின் ஆலோசனை வழங்கவேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திவ்யா விரும்பினால் அவருக்கு மருத்துவரின் ஆலோசனை வழங்குமாறும், அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் தருமபுரியில் நுழைய விதிக்கப்பட்டுள்ள 144 தடையை விலக்கவேண்டும் என்று திருமாவளவன் தொடுத்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உடற்கூறு பரிசோதனை இளவரசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இரமேசு என்பவர் தொடுத்த வழக்கில், போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் சம்பத்குமார் மற்றும் தங்கராஜ் ஆகியோர் தருமபுரி சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் பணித்தது. அதன்படி அவர்கள் பரிசோதித்து அளித்த அறிக்கையில் முரண்பாடு இருப்பதாகக் கூறி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு, உடலை சென்னைக்கு எடுத்து வந்து, மறுபடியும் உடற்கூறு பரிசோதனையை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டாவது உடற்கூறு பரிசோதனை முடிந்து உடல் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிவிசாரணை இளவரசனின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் நீதி விசாரனை நடத்தப்படவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அரசுக்கு கோரிக்கை வைத்தார். திமுக தலைவர் கருணாநிதி உட்பட பிற கட்சித்தலைவர்களும் இக்கோரிக்கையை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் இளவரசன் இறப்புக்கான காரணம் கண்டறியப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இவரது தலைமையில் நீதிவிசாரனை நடைபெறக் கூடாது என்று இளவரசனின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். தலித் இனத்திற்கு எதிராக இவர் செயல்படுபவர் என்று குற்றச்சாட்டு உள்ளதாகவும் அவருக்குப் பதில் ஒய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் நீதிவிசாரனை நடைபெறவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.நீதிபதி சிங்காரவேலு தனது ஆணையத்திற்கு உதவுவதற்காக ஒரு வழக்கறிஞரை நியமிக்கக் கேட்டுக்கொண்டு அரசுக்குக் கடிதம் அனுப்பினார் . அதன்படி தமிழக அரசு, ஆணையத்திற்கு உதவுவதற்கான வழக்கறிஞராக தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ‘சிகரம்’ ச. செந்தில்நாதனை நியமித்தது. இதற்கான அரசாணை ஆகத்து 23 ,2014 பிறப்பிக்கப்பட்டது. தலைவர்களின் அறிக்கைகள்.1 நல்லகண்ணு: தமிழகத்தில் காதல் திருமணம் செய்துகொள்பவர்கள் வாழும் சூழ்நிலை உருவாக்க வேண்டும். இளவரசன் மரணம் ஒரு அவமானச் செயல். |
#09..SANKAR MURDER.12/03/20161
‘Honour’ killing of Dalit youth Shankar in Tamil Nadu: death for six, including father-in-law. Of the remaining five accused, one was awarded the life sentence, one got a five-year jail term and three were acquitted, including the victim's mother-in-law Annalakshmi. In what is believed to be the first such conviction in a case of murder perpetrated due to caste-based discrimination, a trial court here awarded death penalty to six persons, including the father of a caste Hindu girl, for conspiring and killing a Dalit youth who had fallen in love and married her. On March 13 last year, an armed gang had indiscriminately hacked Shankar, a Dalit youth, and his wife Kausalya belonging to the Thevar (OBC) community, outside a shopping complex in Udumalpet in Tirupur district, with long knives. While Shankar had succumbed to the injuries, Kousalya sustained serious injuries.The police had arrested 11 persons including Kausalya’s parents Chinnasamy (40) and Annalakshmi (35) and the assailants. Following the trial, Principal District and Sessions Judge Alamelu Natarajan on Tuesday held eight of the 11 accused guilty and awarded death sentences to six of them including Chinnasamy (prime accused); life sentence to one accused and a five-year imprisonment term to another accused. She acquitted Annalakshmi (Accused 2), P. Pandidurai (A-3, Kausalya’s uncle) and the 10th accused V. Prasanna Kumar (19) stating the prosecution had failed to prove their involvement in the crime beyond reasonable doubt. The death sentence of the six convicts would be executed subject to mandatory confirmation from Madras High Court. The court ordered to collect a total compensation of Rs 11,95,000 from the eight convicts which needed to be paid in different proportions to Kausalya, Shankar’s father and the government. Death penalty Among those awarded capital punishment were accused P. Jagadeesan (31), M. Manikandan (25), P. Selvakumar (25), P. Kalaithamizhvanan (24), and M. Madan alias Michael (25), all assailants in the case, hailing from Dindigul district. Stephen Dhanraj (23) was given life sentence without provisions for remission and M. Manikandan (39 – the A-11) will have to spend five years in jail. Since the latter was out on bail, the police took him immediately into custody on the directions of the judge. Before pronouncing the verdict, the judge asked the prosecution why capital punishment was being sought for the accused. To this Special Public Prosecutor U. Sankaranarayanan, cited Supreme Court judgments in four instances where the court had recommended for death penalty. The instances were related to cases of murder of Dalits – who had married caste Hindus, hiring of people to execute murder and killing people who were in helpless circumstances. “All these incidents apply in this case”, he argued. Mr. Sankaranarayanan told The Hindu that the prosecution would study the court order before taking a decision to appeal against the acquittal of the three persons in the case. உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு உடுமலைப்பேட்டை ஆணவக்கொலை வழக்கு: 11 பேரும் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பு- வீடியோ திருப்பூர்: ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கில் இன்று திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். வெட்டி சாய்த்த கும்பல் இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர். கடந்த ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் பெற்றோர் ஏவிவிட்ட கொலைகார கும்பல் சங்கர்- கவுசல்யாவை பட்டப்பகலில் வெட்டி சாய்த்தது. தப்பிய கவுசல்யா இதில் சங்கர் உயிரிழந்தார். பலத்த வெட்டு காயங்களுடன் கவுசல்யா உயிர் பிழைத்தார். தமிழகத்தையே இந்த ஆணவப் படுகொலை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த மாதிரி… கவுசல்யா பெற்றோர் கைது இவ்வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் இவர்கள் அனைவர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்தது. திருப்பூர் கோர்ட் தீர்ப்பு இந்த வழக்கை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜ் விசாரித்து வந்தார். இவ்வழக்கின் தீர்ப்பை இன்று வழங்குவதாக கடந்த மாதம் நீதிபதி நடராஜ் தெரிவித்திருந்தார். திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வழங்கப் போகும் தீர்ப்பை தமிழகமே மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. |
#10.PRONAY-1 |
No comments:
Post a Comment